முகப்பு
தற்போதைய செய்திகள்

தனியார் கெமிக்கல் தொழில்சாலை கொதிகலனில் விழுந்த தொழிலாளர் சாவு

நாகையை அடுத்த உத்தமசோழபுரத்தில் உள்ள பிரைம் கெமிக்கல்ஸ் என்ற தனியார் ரசாயன தொழில் சாலை. இந்தத் தொழில் சாலையில் சோடியம் சல்பேட், பேரீயம் கார்ப்பனேட் ஆகிய ரசாயனங்கள்

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:04 AM
பகிர்:

நாகையை அடுத்த உத்தமசோழபுரத்தில் உள்ள ஒரு தனியார் கெமிக்கல் தொழில்சாலையின் கொதிகலனில் தவறி விழுந்த தொழிலாளர் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.

நாகையை அடுத்த உத்தமசோழபுரத்தில் உள்ள பிரைம் கெமிக்கல்ஸ் என்ற தனியார் ரசாயன தொழில் சாலை. இந்தத் தொழில் சாலையில் சோடியம் சல்பேட், பேரீயம் கார்ப்பனேட் ஆகிய ரசாயனங்கள் தயாரிக்கப்படுகிறது.

இந்தத் தொழில் சாலையில் சோடியம் சல்பேட் கொதிகலன் பிரிவில் பணியாற்றிய ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பினோதாமாலிக்(25) வெள்ளிக்கிழமை காலை கொதிகலனின் மேற்பகுதியில் உள்ள நடைபாதையிலிருந்து கொதிகலனை கண்காணித்துக் கொண்டிருந்த போது, கொதிகலனுள் தவறி விழுந்தார்.

அதிக வெப்பத்துடன் இருந்த ரசாயன கொதிகலனுள் இருந்து தானே மேலே ஏறிய பினோமாலிக் பலத்தக் காயங்களுடன் கீழே குதித்தார். சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார்.

நாகூர் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →