முகப்பு
தற்போதைய செய்திகள்

மாடியில் இருந்து குதித்து பல் மருத்துவர் தற்கொலை

சேலம் நரசோதிப்பட்டி எமரால்டு கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம். வங்கி மேலாளராகப் பணியாற்றி வருகிறார். இவரது மகன் கணேசன் (27). பல் மருத்துவரான இவர், சேலம் வின்சென்ட்

Updated On : 18 ஜனவரி, 2014 at 7:58 PM
பகிர்:

சேலத்தில் மாடியில் இருந்து குதித்த பல் மருத்துவர், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உயிரிழந்தார்.

சேலம் நரசோதிப்பட்டி எமரால்டு கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம். வங்கி மேலாளராகப் பணியாற்றி வருகிறார். இவரது மகன் கணேசன் (27). பல் மருத்துவரான இவர், சேலம் வின்சென்ட் பகுதியில் தனியாக கிளினிக் வைத்து நடத்தி வந்தார். இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.இந்நிலையில் வெள்ளிக்கிழமை சேலம் ஏ.வி.ஆர். ரவுண்டானா பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் அடுக்கு மாடி வளாகத்துக்கு சென்ற அவர், தனது இருசக்கர வாகனத்தை கீழே விட்டு விட்டு 4-வது மாடிக்குச் சென்றுள்ளார். பின்னர் அங்கிருந்து திடீரென குதித்தார்.

இதில் படுகாயம் அடைந்த அவர் அலறித்துடித்தார். சத்தம் கேட்டு ஓடிச் சென்ற அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சேலம் அரசு அதிநவீன மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.ஆனால் மாலையில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். கணேசன், பல் மருத்துவத் தொழிலில் வருவாய் இல்லாததால் மனமுடைந்த நிலையில் இருந்து வந்ததாகவும், மனக் குழப்பத்துக்காக சிகிச்சை பெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது.

Advertisement

இது குறித்து சூரமங்கலம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.