முகப்பு
தற்போதைய செய்திகள்

பள்ளியில் படிக்கும் மாணவர்களை தமிழக முதல்வர் கைவிடமாட்டார் :  அமைச்சர் கே.சி. வீரமணி

ஆம்பூர் அருகே சோலூர் கிராமத்தில் சனிக்கிழமை நடந்த விழாவில் 1006 பயனாளிகளுக்கு விலையில்லா பேன், மிக்சி, கிரைண்டர் ஆகியவற்றை வழங்கி கே.சி. வீரமணி மேலும் பேசியது, தமிழக முதல்வரின்

Updated On : 19 ஜனவரி, 2014 at 2:54 PM
பகிர்:

பள்ளியில் படிக்கும் மாணவர்களை அவர்களது பெற்றோர்கள் கைவிட்டாலும், தமிழக முதல்வர் கைவிடமாட்டார் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.சி. வீரமணி தெரிவித்தார்.

ஆம்பூர் அருகே சோலூர் கிராமத்தில் சனிக்கிழமை நடந்த விழாவில் 1006 பயனாளிகளுக்கு விலையில்லா பேன், மிக்சி, கிரைண்டர் ஆகியவற்றை வழங்கி கே.சி. வீரமணி மேலும் பேசியது, தமிழக முதல்வரின் தேர்தல் வாக்குறுதிகள் அனைத்து மக்களிடம் சென்றடைந்து கொண்டிருக்கின்றது.   தமிழகத்தில் மட்டும் தான் பள்ளி மாணவர்களுக்கு அரசு சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வரப்படுகிறது.  தாய் வீட்டு சீதனமாக வழங்கப்படும் பேன், மிக்சி, கிரைண்டர் ஆகியவற்றை நல்ல தரத்துடன் தமிழக முதல்வர் வழங்கி வருகிறார்.  அதனை பாதுகாப்பாக வைத்து பயன்படுத்த வேண்டுமென அவர் கூறினார்.

விழாவில் ஆம்பூர் எம்எல்ஏ அ. அஸ்லம் பாஷா, மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலர் ஆர். பாலசுப்பிரமணி, விவசாய பிரிவு செயலர் ஆர். வெங்கடேசன், இளைஞர் அணி செயலர் ஜி.ஏ. டில்லிபாபு, கட்சியின் மாதனூர் ஒன்றிய செயலர் ஜோதிராமலிங்கராஜா, ஆம்பூர் தொகுதி செயலர் அகரம்சேரி ஆர். வெங்கடேசன், வட்டாட்சியர் கஸ்தூரி, ஊராட்சி மன்ற தலைவர் ஞானமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.