முகப்பு
தற்போதைய செய்திகள்

படகு கவிழ்ந்து மீனவர் சாவு!

சிதம்பரம் அருகே சாமியார்பேட்டையைச் சேர்ந்த மீனவர்கள் சுப்பராயன் (65), கோவிந்தராஜ் (45), மதன்ராஜ் (46), சூரியா (40)  ஆகிய நால்வரும் சாமியார்பேட்டை கடற்கரையிலிருந்து படகில் மீன்பிடிக்க

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:06 AM
பகிர்:

சிதம்பரம் அருகே கடலில் படகு கவிழ்ந்து மீனவர் ஒருவர் இறந்தார். மூவர் உயிர் தப்பி கரை திரும்பினர்.

சிதம்பரம் அருகே சாமியார்பேட்டையைச் சேர்ந்த மீனவர்கள் சுப்பராயன் (65), கோவிந்தராஜ் (45), மதன்ராஜ் (46), சூரியா (40)  ஆகிய நால்வரும் சாமியார்பேட்டை கடற்கரையிலிருந்து படகில் மீன்பிடிக்க ஞாயிற்றுக்கிழமை மாலை கடலுக்கு சென்றனர். கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த கடல் சீற்றத்தில் படகு கவிழ்ந்தது. உடனே அருகாமையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் சென்று கோவிந்தராஜ், மதன்ராஜ், சூரியா ஆகிய மூவரை போராடி காப்பாற்றினர். சுப்பராயன் மட்டும் நீரில் மூழ்கி இறந்தார். அவரது உடலை கைப்பற்றி கரைக்கு கொண்டு வந்தனர்.

இதுகுறித்து பரங்கிப்பேட்டை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.