பூச்சி மருந்து குடித்து கணவன், மனைவி தற்கொலை
சிதம்பரம் அருகே உள்ள குமுடிமுலை கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன் (55). விவசாய கூலித்தொழிலாளியான இவரது மனைவி பெயர் பாப்பாமணி (50). இவர்களுக்கு ரமேஷ் என்ற மகனும்,
சிதம்பரம் அருகே மகள் வீட்டை விட்டு சென்றதால் பூச்சிமருந்து குடித்து கணவன், மனைவி இருவரும் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.
சிதம்பரம் அருகே உள்ள குமுடிமுலை கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன் (55). விவசாய கூலித்தொழிலாளியான இவரது மனைவி பெயர் பாப்பாமணி (50). இவர்களுக்கு ரமேஷ் என்ற மகனும், ரமணி என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் கணேசன் மகளுக்கு திருமணம் ஏற்பாடு செய்தார். ஆனால் மகள் ரமணி வேறு ஒருவரை விரும்புவதால் திருமணம் செய்ய மறுத்து வீட்டை விட்டு சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை கணவன் கணேசன், மனைவி பாப்பாமணி ஆகிய இருவரும் வீட்டிலிருந்து பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.
இதுகுறித்து புவனகிரி போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.