முகப்பு
தற்போதைய செய்திகள்

கடலூர் மாவட்ட குழந்தைநல மருத்துவர் குழுமத்திற்கு 4 விருதுகள்

டீன் ஏஜ் டே, தாய்ப்பால் வாரவிழா, குழந்தை மற்றும் வளர் இளம்பருவத்தினர் வாரம் ஆகியவை சிறப்பாக கொண்டாடியதற்காக முதலிடமும், அகில இந்திய அளவில் சிறந்த மாவட்டமாக மூன்றாவது இடத்தையும்

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:11 AM
பகிர்:

அகில இந்திய குழந்தை நல மருத்துவர் குழும கடலூர் பிரிவு அகில இந்திய அளவில் 4 விருதுகளை பெற்றுள்ளது.

டீன் ஏஜ் டே, தாய்ப்பால் வாரவிழா, குழந்தை மற்றும் வளர் இளம்பருவத்தினர் வாரம் ஆகியவை சிறப்பாக கொண்டாடியதற்காக முதலிடமும், அகில இந்திய அளவில் சிறந்த மாவட்டமாக மூன்றாவது இடத்தையும் கடலூர் மாவட்ட அகில இந்திய குழந்தை நல மருத்துவர் குழுமம் பெற்று அகில இந்திய அளவில் 4 விருதுகளை பெற்றுள்ளது.

மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரில் அண்மையில் நடைபெற்ற அகில இந்திய குழந்தை நல மருத்துவர் குழும மாநாட்டில் கடலூர் மாவட்ட குழந்தை நல மருத்துவர் குழும முன்னாள் தலைவர் டாக்டர் வி.சிவப்பிரகாசம் கடலூர் மாவட்டத்திற்கான 4 விருதுகளை பெற்றுக்கொண்டார். இவ்விருதினை அகில இந்திய தலைவர் சி.பி.பன்ஸால், தேர்வு தலைவர் எம்.பி.ஜெயின் ஆகியோர் மேற்கண்ட அவார்டுகளை வழங்கி கவுரவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.