சிதம்பரம் அருகே ஆயுதப்படை காவலர் தற்கொலை
சிதம்பரம் லலிதாம்பாள்நகரில் வசிப்பவர் ஜெயராஜ் (31). ஆயுதப்படை காவலரான இவருக்கு சுகந்தி என்ற மனையும், இரு ஆண் குழந்தைகளும் உள்ளனர். மனைவி சுகந்தி அண்ணாமலைப்
சிதம்பரம் அருகே ஆயுதப்படை காவலர் ஒருவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சிதம்பரம் லலிதாம்பாள்நகரில் வசிப்பவர் ஜெயராஜ் (31). ஆயுதப்படை காவலரான இவருக்கு சுகந்தி என்ற மனையும், இரு ஆண் குழந்தைகளும் உள்ளனர். மனைவி சுகந்தி அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் எம்ஃபில் பட்டவகுப்பு பயின்று வருகிறார். இந்நிலையில் திங்கள்கிழமை இரவு குழந்தைகளை யார் பராமரிப்பது என்பதில் கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை காலை மனைவி கல்லூரிக்கு சென்ற பிறகு ஜெயராஜ் வீட்டில் உள்ள அறையில் மின்விசிறியில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த அண்ணாமலைநகர் போலீஸார் வழக்குப் பதிந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.