மணப்பாறையில் 10 லட்சம் கொள்ளையடைத்த கும்பல் சிக்கியது
மணப்பாறை அருகே நகை வியாபாரியிடம் ரூ10 லட்சத்தைப் பறித்துச் சென்ற கொள்ளைக் கும்பலைச் சேர்ந்த 4 பேர் சிக்கினார்கள். மேலும் இரு நபருக்கு போலீசார் வலைவீசி
மணப்பாறை அருகே நகை வியாபாரியிடம் ரூ10 லட்சத்தைப் பறித்துச் சென்ற கொள்ளைக் கும்பலைச் சேர்ந்த 4 பேர் சிக்கினார்கள். மேலும் இரு நபருக்கு போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
மணப்பாறையில் வீரப்பூர் அருகே திங்களன்று காலை கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சி.என். பாளையம் நகை வியாபாரி பழனிராஜா, மற்றும் அருண்ராஜாவிடம் தங்க நகை மற்றும் தங்க பிஸ்கட்கள் குறைந்த விலையில் விற்பதாக நாடகமாடி சுமார் 10 லட்ச ரூபாய் கொள்ளையடிக்கப் பட்டது. பழனிராஜா புகாரில் தரப்பட்ட தகவலின்படி, கொள்ளையர்கள் தொடர்புகொண்ட செல்போன் எண் மற்றும் வாகன எண்களை வைத்து விசாரனை மணப்பாறை காவல் துறை துணை கண்காணிப்பாளர் கணேசன், ஆய்வாளர் செந்தில்குமார் அவர்கள் தலைமையில் தனிப்படை அமைத்து முடிக்கிவிடப்பட்டது.
தனிப்படையானது தனது வேட்டையில் 4 பேரை கைது செய்துள்ளதாகத் தெரிகிறது. அவர்கள் கடலூரைச் சேர்ந்த சாந்தகுமார் வயது20, கடவூர் வெள்ளைச்சாமி வயது 50, திருவண்ணாமலை சிங்காரவேல் வயது 30, தேனியைச் சேர்ந்த ரகு வயது 30 என்றும் தெரியவந்துள்ளது. அவர்களிடம் மேலும் விசாரனை நடத்தியதில் இக்கொள்ளை சம்பவத்தில் இவர்களுடன் மேலும் ஈடுபட்டுள்ள 2 பேர் தலைமறைவானதும் தெரியவந்துள்ளது. இதில் தலைமறைவான அன்வர் மற்றும் ஜே.பி.ஆர். ஆகிய இருவரையும் பிடிக்க தேடுதல் வேட்டையை துரிதப்படுத்தியுள்ளது. இதுபற்றி காவல்துறையினர் கூறுகையில் தேடுதல் வேட்டை மற்றும் விசாரனையும் நடந்து வருவதாகவும் வழக்குப் பதிவு செய்த பின்பே முழு விபரமும் தெரியவரும் என்றும் கூறினார்கள்.