இலங்கையில் விடுவிக்கப்பட்ட 18 மீனவர்கள் காரைக்கால் துறைமுகம் வருகை
இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட 71 மீனவர்கள் பின்னர் அந்நாட்டு நீதிமன்ற உத்தரவுப்படி விடுவிக்கப்பட்டனர். அவர்களில் புதுக்கோட்டை, ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் 18 பேர் இன்று காலை
இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட 71 மீனவர்கள் பின்னர் அந்நாட்டு நீதிமன்ற உத்தரவுப்படி விடுவிக்கப்பட்டனர். அவர்களில் புதுக்கோட்டை, ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் 18 பேர் இன்று காலை காரைக்கால் தனியார் துறைமுகத்துக்கு வந்து சேர்ந்தனர். உடன் 5 விசைப் படகுகளும் விடுவிக்கப்பட்டு காரைக்கால் துறை முகம் வந்து சேர்ந்தன. மீதமுள்ள 53 பேர் இன்று பகல் 12 மணி அளவில் கப்பலில் வந்து சேருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காரைக்கால் துறைமுகத்துக்கு வந்த அவர்களை காரைக்கால் கமாண்டண்ட் உதல் சிங்,
அந்தந்த மாவட்ட மீன்வர்களிடம் ஒப்படைத்தார். இவர்களை நாகை ஆட்சியர், மீன்வளத்துறை அமைச்சர் ஆகியோர் வரவேற்றனர்.