தீர்த்தவாரிக்காக சிதம்பரம் திருப்பாற்கடல் குளம் தூர்வாரும் பணி தொடக்கம்!
சிதம்பரம் வேங்கான்தெருவில் உள்ள ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூர்த்தியின் தசதீர்த்தங்களில் ஒன்றான திருப்பாற்கடல் தீர்த்தகுளத்தில் 30 ஆண்டுகளுக்கு பிறகு வருகிற ஜன.30-ம் தேதி நடைபெற
சிதம்பரம் வேங்கான்தெருவில் உள்ள திருப்பாற்கடல் குளம் தீர்த்தவாரி உற்சவத்திற்காக தூர்வாரும் பணி திங்கள்கிழமை தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.
சிதம்பரம் வேங்கான்தெருவில் உள்ள ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூர்த்தியின் தசதீர்த்தங்களில் ஒன்றான திருப்பாற்கடல் தீர்த்தகுளத்தில் 30 ஆண்டுகளுக்கு பிறகு வருகிற ஜன.30-ம் தேதி நடைபெற உள்ள தீர்த்தவாரி உற்சவத்தை முன்னிட்டு இந்து ஆலய பாதுகாப்புக்குழு சார்பில் தூர்வாரும் பணி திங்கள்கிழமை தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.
சமயக்குரவர்கள் நால்வரில் ஒருவரான ஸ்ரீமாணிக்காவசக பெருமான் திருவாசகம் சொல்ல நடராஜப்பெருமான் தன் கைப்பட எழுதிய வரலாற்று சிறப்பு மிக்க இடமான சிதம்பரம் வேங்கான்தெருவில் உள்ளது ஆவுடையார் கோயில். இக்கோயிலை மாணிக்கவாசகர் கட்டி, அங்கேயே தங்கியிருந்து வழிபட்டு வந்துள்ளார். அவருக்கு முன்பே அங்கு பதஞ்சலி, வியாக்கிரபாதர் ஆகிய முனிவர்கள் பர்ணசாலை அமைத்து தங்கியிருந்து தவம் செய்த இடமாகும். அக்கோயிலில் உபமன்யு என்ற முனிவருக்காக தில்லைக்கூத்தன் ஸ்ரீநடராஜப்பெருமான் திருப்பாற்கடலை உருவாக்கினான் என வரலாறு கூறுகிறது.