முகப்பு
தற்போதைய செய்திகள்

திருமலையில் இலங்கை அமைச்சர் வழிபாடு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க, இலங்கை, மக்கள் தொடர்பு மற்றும் பொது விவகாரத்துறை அமைச்சர், மெர்வின் சில்வா திருமலைக்கு வந்தார். கடந்த முறை, திருமலைக்கு வந்த

Updated On : 28 ஜனவரி, 2014 at 7:40 PM
பகிர்:

திருமலை ஏழுமலையானை தரிசிக்க இலங்கை அமைச்சர் திருமலைக்கு செவ்வாய்க்கிழமை மாலை வந்தார்.

  திருமலை ஏழுமலையானை தரிசிக்க, இலங்கை, மக்கள் தொடர்பு மற்றும் பொது விவகாரத்துறை அமைச்சர், மெர்வின் சில்வா திருமலைக்கு வந்தார். கடந்த முறை, திருமலைக்கு வந்த, இலங்கை அதிபருக்கு, கருப்பு கொடி காட்ட தமிழகத்திலிருந்து பலர் திருப்பதிக்கு வந்தனர் அதனால் அமைச்சருக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

சென்னை விமான நிலையத்திலிருந்து, 2 எஸ்கார்ட் வண்டிகளும், திருப்பதியிலிருந்து ஒரு வண்டி என 3 வண்டிகள் அமைச்சரின் பாதுகாப்பிற்காக ஏற்படுத்தப்பட்டது. செய்தியாளர்கள் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும்,ஏதும் சொல்ல விரும்பவில்லை என்ற பதிலையே அவர் கூறினார். இன்று இரவு, திருமலையில் தங்கும் அவர், நாளை, சுப்ரபாத சேவையில் ஏழுமலையானை தரிசிக்க உள்ளார்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.