முகப்பு
தற்போதைய செய்திகள்

நிலுவை தொகைய வழங்க ரூ.10000 லஞ்சம் வாங்கிய சுகாதார நிலைய கண்காணிப்பாளர் கைது

திருவண்ணாமலை தண்டராம்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலைய கண்காணிப்பாளராக பணியாற்றுபவர் முரளி. இவர் கடந்த ஆண்டு விருப்ப ஓய்வு பெற்ற பெண் செவிலியர் ஒருவருக்கு சேரவேண்டிய நிலுவை

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:15 AM
பகிர்:

திருவண்ணாமலை தண்டராம்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலைய கண்காணிப்பாளராக பணியாற்றுபவர் முரளி. இவர் கடந்த ஆண்டு விருப்ப ஓய்வு பெற்ற பெண் செவிலியர் ஒருவருக்கு சேரவேண்டிய நிலுவை தொகையை வழங்க ரூ.10000 லஞ்சம் கேட்டாராம்.லஞ்சப் பணம் கொடுக்காததால் செவிலியருடைய கோப்புகளை நிலுவையில் வைத்தாராம். இதனால் பாதிக்கப்பட்ட செவிலியர் திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் புகார் அளித்தார்.

இதனையடுத்து லஞ்ச ஒழிப்பு துறை போலீஸாரின் அறிவிரையின்படி ரசாயனம் தடவிய ரூபாயை முரளியிடம் இன்று மாலை கொடுக்கும்போது மறைந்திருந்த போலீஸார் அவரை கைது செய்தனர். விசாரணையில் திருவண்ணாமலை சுகாதார பணிகள் துணை இயக்குனர் அலுவலக அதிகாரிகளுக்கு கொடுப்பதற்காகவே லஞ்சம் வாங்கினேன் என்று கைது செய்யப்பட்ட முரளி தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.