முகப்பு
தற்போதைய செய்திகள்

மாநில அளவிலான கூடைப்பந்துப் போட்டிகள் நாளை தொடக்கம்

மாநில அளவிலான மின்னொளியில் கூடைப்பந்துப் போட்டிகள் கல்லிடைககுறிச்சியில் வெள்ளிக்கிழமை தொடங்கி 3 தினங்கள் நடைபெறுகிறது.

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:16 AM
பகிர்:

மாநில அளவிலான மின்னொளியில் கூடைப்பந்துப் போட்டிகள் கல்லிடைககுறிச்சியில் வெள்ளிக்கிழமை தொடங்கி 3 தினங்கள் நடைபெறுகிறது.

போட்டியில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 20 அணிகள் பங்கேற்க உள்ளது. திலக் ஹைட்ரா கூடைப்பந்தாட்டக் கழகம் சார்பில் கனடியன் டிராபி 2014 கோப்பைக்கான திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைக்குறிச்சியில் மாநில அளவிலான மின்னொளி கூடைப்பந்தாட்டப் போட்டிகள் வெள்ளிக்கிழமை தொடங்கி பிப். 2 ம் தேதி வரை 3 தினங்கள் நடைபெறுகிறது. இப்போட்டியில் மதுரை, கன்னியாகுமரி, திண்டுக்கல், திருச்சி உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 20 அணிகள் பங்கேற்கின்றன.

கல்லிடைக்குறிச்சி பாலகங்காதர திலக் மினி விளையாட்டு மைதானத்தில் இப்போட்டிகள் வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு தொடங்குகிறது. பிப். 2 ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) இரவு 8 மணிக்கு பரிசளிப்பு விழா நடைபெறுகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →