முகப்பு
தற்போதைய செய்திகள்

சீர்காழி அருகே அதிமுக வழக்குரைஞருக்கு அறிவாள் வெட்டு

சீர்காழி சேர்ந்தவர் வழக்கறிஞர் தியாகராஜன்(40). அதிமுகவை சேர்ந்த வழக்குரைஞரான இவர் நேற்றிரவு இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்தபோது, சிறுவன் ஒருவன் குறுக்கே ஓடியதாக தெரிகிறது.

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:17 AM
பகிர்:

சீர்காழி சேர்ந்தவர் வழக்கறிஞர் தியாகராஜன்(40). அதிமுகவை சேர்ந்த வழக்குரைஞரான இவர் நேற்றிரவு இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்தபோது, சிறுவன் ஒருவன் குறுக்கே ஓடியதாக தெரிகிறது. இதனால் கோபம் அடைந்த அவர் சிறுவனின் தாயிடம் கண்டித்துள்ளார். அப்போது அங்கு வந்த நகராட்சி ஊழியர் மணிவண்ணன் என்பவர் தியாகராஜனிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றவே தான் மறைத்து வைத்திருந்த அறிவாளால் மணிவண்ணன் வழக்குரைஞரை தலையில் வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டார். காயம் அடைந்த வழக்குரைஞர் தியாகராஜன் சீர்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து போலீஸார் வழக்கு பதிந்து மணிவண்ணனை தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.