தற்போதைய செய்திகள்

விருதுநகர் அருகே வெடிவிபத்து சம்பவத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு எம்.எல்.ஏ நிதி உதவி

விருதுநகர் அருகே கருந்திரி ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்துச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நேரில் ஆறுதல் கூறி சட்டப்பேரவை உறுப்பினர் க.பாண்டியராஜன் தலா ரூ.30 ஆயிரம் நிதி

எஸ். பாண்டியன்

விருதுநகர் அருகே கருந்திரி ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்துச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நேரில் ஆறுதல் கூறி சட்டப்பேரவை உறுப்பினர் க.பாண்டியராஜன் தலா ரூ.30 ஆயிரம் நிதி உதவியை செவ்வாய்கிழமை வழங்கினார்.

விருதுநகர் அருகே ஒண்டிப்புலிநாயக்கனூர் கிராமத்தில் கம்மாபட்டி பகுதியில் அனுமதியின்றி செயல்பட்ட கருந்திரி தயாரிப்பு கூடாரத்தில் கடந்த வெள்ளிக்கிழமை வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் வேலை செய்து கொண்டிருந்த கும்பகோணத்தைச் சேர்ந்த அருமைதுரை(45) அந்த இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தார். மேலும், இந்த விபத்தில் சிதறிய கற்கள் காலனி குடியிருப்பு பகுதியில் விழுந்ததில் வீட்டிற்கு முன்பு இருந்த சின்ராஜ் மகள் காளீஸ்வரி(7), சந்தோஷம் என்பவரின் மனைவி பொன்னம்மாள்(70) மற்றும் காளிராஜ்(13) ஆகியோர் காயம் அடைந்து உயிரிழந்தனர். அதேபோல், விபத்தில் படுகாயம் அடைந்த சங்கரலிங்காபுரத்தைச் சேர்ந்த துரைராஜ்(42) மற்றும் சங்கரவேல்(45) ஆகியோர் சிகிச்சை பலனின்றி கடந்த ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனர். இந்நிலையில் தீ  விபத்தில் சாவு எண்ணிக்கை 6 ஆக உயர்ந்தது.

இதையறிந்த விருதுநகர் சட்டப்பேரவை உறுப்பினர் க.பாண்டியராஜன் தனது ஆதாரவாளர்கள் ஆகியோருடன் ஒண்டிப்புலிநாயக்கனூர் மற்றும் சங்கரலிங்காபுரம் கிராமங்களுக்கு நேரில் சென்று உயிரிழந்தோர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். பின்னர் எம்.எல்.ஏ சொந்த நிதியிலிருந்து ரூ.25 ஆயிரமும், விருதுநகர் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் கி.கலாநிதி சொந்த நிதியிலிருந்து ரூ.5 ஆயிரமும் சேர்த்து தலா ரூ.30 ஆயிரம் உதவித் தொகையை உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரிடம் வழங்கினார். அதேபோல், விருதுநகர் அரசு மருத்துவமனையில் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றவர்களை சந்தித்து ஆறுதல் கூறி எம்.எல்.ஏ தலா ரூ.5 ஆயிரத்திற்கான காசோலையையும், ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் ரூ.1000 ரொக்கமாகவும் வழங்கினார்கள்.

உடன் மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறையின் மாவட்ட செயலாளர் வெங்கடேஷ், அண்ணா தொழிற்சங்கத்தின் செயலாளர் தர்மா நகர இளைஞரணி செயலாளர் ஐ.ஆர்.மகேந்திரன், ஒன்றிய எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் மாரியப்பன் உள்ளிட்ட நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எதிர்நீச்சல் -2 தொடரிலிருந்து விலகியது ஏன்? நடிகை கனிகா விளக்கம்

திருமண கொண்டாட்டத்தில் விஜய் தேவரகொண்டா - ரஷ்மிகா மந்தனா!

சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் அலைமோதும் கூட்டம்!

மீண்டும் மகாபாரதம்! நாள்தோறும் காலை ஒருமணி நேரம் ஒளிபரப்பாகிறது!

பெத் மூனி அதிரடி: இந்தியாவை வீழ்த்தி ஆஸி. அபார வெற்றி!

SCROLL FOR NEXT