தற்போதைய செய்திகள்

விருதுநகர் அருகே தூய சவேரியார் ஆலயம் எதிரே டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு

விருதுநகர் அருகே தூய சவேரியார் ஆலயம் பகுதியில் அரசு விதிமுறைகளுக்கு எதிராக மதுபானக் கடை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கத்தோலிக்க கிறிஸ்துவர்கள் முதல்வரின் தனிப்பிரிவு

எஸ். பாண்டியன்

விருதுநகர் அருகே தூய சவேரியார் ஆலயம் பகுதியில் அரசு விதிமுறைகளுக்கு எதிராக மதுபானக் கடை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கத்தோலிக்க கிறிஸ்துவர்கள் முதல்வரின் தனிப்பிரிவு அலுவலகத்திற்கு மனு அனுப்பியுள்ளனர்.

இது தொடர்பாக தூய சவேரியார் ஆலய கத்தோலிக்க கிறிஸ்துவர்கள், முதல்வரி்ன் தனிப்பிரிவு அலுவலகம் மற்றும் ஆட்சியர் உள்ளிட்டோருக்கு அனுப்பியுள்ள மனுவில் தெரிவித்திருப்பதாவது:

விருதுநகர் பாண்டியன் நகரில் செயல்பட்டு வந்த மதுபானக் கடையை பொதுமக்கள் இடையூராக இருப்பதாக கூறி அகற்றம் செய்துள்ளனர். அதேபோல், பெரியபேராலியில் உள்ள கடையும் அப்பகுதியில் உள்ளவர்களின் எதிர்ப்பினால் அகற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் இரண்டு கடைகளையும் சேர்த்து அனைத்து நவீன வசதியுடன் மல்லாங்கிணறு சாலையில் அமைக்கவுள்ளனர். இதன் எதிரே தூய சவேரியார் ஆலயம் செயல்பட்டு வருகிறது. அரசு விதிமுறையின் படி பள்ளி, கல்லூரி,  ஆயலங்கள் மற்றும் திருக்கோயில்கள் ஆகிய இடங்களில் இதுபோன்ற மதுபான கடைகள் நடத்துவதற்கு தடை விதித்துள்ளது.

இதையும் மீறி ஆலயம் வளாகம் எதிரே இக்கடையை அமைத்து வருகின்றனர். குறிப்பாக இந்த ஆலயத்தில் திங்கள்கிழமை தொடங்கி, தொடர்ந்து வியாழக்கிழமை வரையிலும் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலையில் திருப்பலி நிகழச்சி, ஜெப வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்த ஆலையத்திற்கு காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரையில் கிறிஸ்துவர்கள் மட்டும் அல்லாமல், பிற மதங்களைச் சேர்ந்தவர்களும் இக்கடை அமைக்கப்படும் வழியாகத்தான் வரவேண்டும்.

அதோடு, இக்குறிப்பிட்ட பகுதியில் விருதுநகர் ஆர்.சி.பள்ளி, எஸ்.எப்.எஸ் பள்ளி, நோபிள் பள்ளி, உள்ளிட்ட பெண்கள் கல்லூரிகளுக்கு செல்லும் பேருந்துகள் நிற்கும் இடமாகும். இதுபோன்ற காரணங்களால் மது அருந்துகிறவர்களால் தொந்தரவு ஏற்படுவதற்கும் வாய்ப்புள்ளது. எனவே பொதுமக்களின் நலன் கருதி வழிபாட்டு தலத்திற்கு அருகில் அமைக்கப்பட இருக்கிற மதுபானக் கடையை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வலியுறுத்து முதல்வரின் தனிப்பிரிவு மற்றும் ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் ஆகியோருக்கு அனுப்பிய மனுவில் கத்தோலிக்க கிறிஸ்துவர்கள் தெரிவித்துள்ளனர்.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சூப்பர் 8 சுற்று: இங்கிலாந்துக்கு எதிராக பாகிஸ்தான் பேட்டிங்!

பேரவைத் தேர்தல் : அதிமுகவிடம் 35 தொகுதிகளைக் கேட்கும் பாஜக?

ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டியில் சுபம் பண்டிர் சதம்: முதல் நாளில் ஜம்மு காஷ்மீர் 284 ரன்கள் குவிப்பு!

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 6 காசுகள் சரிந்து ரூ. 90.95 ஆக நிறைவு!

கிரையோதெரபி: புற்றுநோய் சிகிச்சையின் மைல்கல்! கட்டிகளை உறைய வைத்து அழிக்கும்!

SCROLL FOR NEXT