தற்போதைய செய்திகள்

விருதுநகர் மாவட்டத்தில் சுயநிதிப்பாட பிரிவு பிளஸ்2 மாணவ மாணவிகள் கவனத்திற்கு...

விருதுநகர் மாவட்டத்தில் தனியார் பள்ளிகளில் சுயநிதிப்பாட பிரிவுகளில் பிளஸ்2 படித்து வரும் மாணவ, மாணவிகளுக்கு அரசு விதிமுறைகளின் படி விலையில்லா மடிக்கணினி வழங்கப்படமாட்டாது

எஸ். பாண்டியன்

விருதுநகர் மாவட்டத்தில் தனியார் பள்ளிகளில் சுயநிதிப்பாட பிரிவுகளில் பிளஸ்2 படித்து வரும் மாணவ, மாணவிகளுக்கு அரசு விதிமுறைகளின் படி விலையில்லா மடிக்கணினி வழங்கப்படமாட்டாது என ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு விவரம்:

இந்த மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் சுயநிதிப்பாடப்பிரிவுகளில் மாணவ, மாணவிகள் பிளஸ்2  பயின்று வருகின்றனர். இவர்களுக்கு அரசு விதிமுறைப்படி விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்படாது. எனவே அரசின் கொள்கை முடிவு என்பதாலும், பள்ளி நிர்வாகம் ஆகியவைகளுக்கு எவ்வித குந்தகமும் இல்லாமல் தலைமையாசிரியர்கள் செயல்பட வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.

கடந்த சில வாரங்களாக விலையில்லா மடிக்கணினிகள் வழங்க வலியுறுத்தி மாணவிகள் பெற்றோர்களுடன் வந்து ஆட்சியர் அலுவலகம் முன்பு மறியல் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இனிமேல் இதுபோன்று மறியலில் ஈடுபட்டாலோ, ஏதேனும் தவறுகள் அல்லது நிர்வாக பிரச்னைகள் ஏற்பட்டாலோ அப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் தான் பொறுபேற்க வேண்டும். அதேபோல், மறியலில் ஈடுபடும் மாணவ, மாணவிகள் மீது காவல் துறை மூலம் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் என ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சூப்பர் 8 சுற்று: இங்கிலாந்துக்கு எதிராக பாகிஸ்தான் பேட்டிங்!

பேரவைத் தேர்தல் : அதிமுகவிடம் 35 தொகுதிகளைக் கேட்கும் பாஜக?

ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டியில் சுபம் பண்டிர் சதம்: முதல் நாளில் ஜம்மு காஷ்மீர் 284 ரன்கள் குவிப்பு!

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 6 காசுகள் சரிந்து ரூ. 90.95 ஆக நிறைவு!

கிரையோதெரபி: புற்றுநோய் சிகிச்சையின் மைல்கல்! கட்டிகளை உறைய வைத்து அழிக்கும்!

SCROLL FOR NEXT