முகப்பு
தற்போதைய செய்திகள்

நெல்லை அருகே இளைஞர் கொலை: மறியல், கடையடைப்பு, போலீஸ் குவிப்பு

திருநெல்வேலி மாவட்டம், கோபாலசமுத்திரத்தில் பழிக்குப் பழியாக புதன்கிழமை இளைஞரை விரட்டி சென்று வெட்டிக் கொலை செய்தனர். உடலை தர மறுத்து உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர். அங்கு  கடைகள் அடைக்கப்பட்டதை அடுத்து பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து அங்கு எஸ்.பி. தலைமையில் போலீஸார் குவிக்கப்பட்டனர்.

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:50 AM
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம், கோபாலசமுத்திரத்தில் பழிக்குப் பழியாக புதன்கிழமை இளைஞரை விரட்டி சென்று வெட்டிக் கொலை செய்தனர். உடலை தர மறுத்து உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர். அங்கு  கடைகள் அடைக்கப்பட்டதை அடுத்து பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து அங்கு எஸ்.பி. தலைமையில் போலீஸார் குவிக்கப்பட்டனர்.

கோபாலசமுத்திரம் பஸ் நிலையம் அருகில் கடந்த 2013 ல் அக்டோபர் 31 ம் தேதி சமுதாயக் கொடிக் கம்பம் அவமரியாதை செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து கோபாலசமுத்திரம் தெற்கு ஊரை சேர்ந்த லட்சுமணன் மகன் தர்மராஜ் (27) கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தொடர்புடைய 20 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் புதன்கிழமை கோபாலசமுத்திரம் தெற்கு ஊரை சேர்ந்த பகவதி சுப்பிரமணியன் மகன் கார்த்திக் (25) என்பவர் அங்குள்ள ஆற்றில் குளித்து விட்டு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தாராம்.

ராமலிங்கபுரம் தெரு வழியாக சென்ற கார்த்திக்கை மோட்டார் சைக்கிளில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் வழி மறித்து சரமாரியாக அரிவாளால் வெட்டி விட்டு ஓடிவிட்டது. பலத்த காயமைடந்த கார்த்திக் சம்பவ இடத்திலே இறந்தார். தகவலறி்ந்த கார்த்திக் உறவினர்கள் திரண்டு கொலையாளிகளை கைது செய்ய வேண்டும் என தெரிவித்து மறியலில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தை அடுத்து கோபாலசமுத்திரத்தில் கடைகள் அடைக்கப்பட்டன.

சம்பவ இடத்திற்கு திருநெல்வேலி எஸ்.பி. நரேந்திரநாயர் சென்று விசாரணை நடத்தினார். டி.எஸ்.பி. க்கள் ப. ராஜா, பா. மணிமாறன், சண்முகம் ஆகியோர் தலைமையில் கோபாலசமுத்திரத்தில் போலீஸார் குவிக்கப்பட்டனர். இந்த சம்பவத்தை அடுத்து கோபாலசமுத்திரம் வழியாக செல்லும் பஸ்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து எஸ்.பி. நாரேந்திரநாயர் கூறியதாவது: கடந்த 2013 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கோபாலசமுத்திரத்தை சேர்ந்த தர்மராஜ் கொலை செய்யப்பட்டார். விரோதம் காரணமாக பழிக்குப் பழியாக கார்த்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். கொலையாளிகளை பிடிக்க 5 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.

முழு கட்டுரையைப் படிக்க →