அண்ணாமலைப் பல்கலை. பிஇ கவுன்சிலிங் தொடங்கியது! ஆர்வத்துடன் பங்கேற்ற மாணவ, மாணவியர்கள்
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பிஇ படிப்பிற்கான மாணவர்கள் சேர்க்கைக்கான கவுன்சிலிங் வியாழக்கிழமை (ஜூலை 10-ம் தேதி) காலை தொடங்கியது. முதல் நாள் கவுன்சிலிங்கில் 984 மாணவ,
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பிஇ படிப்பிற்கான மாணவர்கள் சேர்க்கைக்கான கவுன்சிலிங் வியாழக்கிழமை (ஜூலை 10-ம் தேதி) காலை தொடங்கியது. முதல் நாள் கவுன்சிலிங்கில் 984 மாணவ, மாணவியர்கள் பங்கேற்றனர்.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 2014-15 ஆண்டிற்கான பிஇ படிப்பில் சேருவதற்கான விண்ணப்ப படிவம் கடந்த மே.9-ம் தேதி முதல் வழங்கப்பட்டது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் ஜூன்.11-ம் தேதிக்குள் அனுப்பி வைக்கப்பட வேண்டும் என பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்தது. பிஇ படிப்பில் சேர 2545 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கான கவுன்சிலிங் பல்கலைக்கழக நிர்வாகக் கட்டடத்தில் வியாழக்கிழமை (ஜூலை 10) காலை தொடங்கியது. பிஇ கவுன்சிலிங் இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. முதல் நாள் கவுன்சிலிங்கில் பங்கேற்க 984 மாணவ, மாணவியர்களுக்கு அழைப்பு கடிதம் அனுப்பப்பப்பட்டு பங்கேற்றனர். வெள்ளிக்கிழமை நடைபெறும் இரண்டாம் நாள் கவுன்சிலிங்கில் பங்கேற்க ஆயிரம் பேருக்கும் அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. முதல் கலந்தாய்வில் பங்கேற்ற மாணவ, மாணவியர்கள் ஏராளமானோர் மெக்கானிக்கல், சிவில், எலக்டிக்ரானிக் அன்ட் எலக்டிரிகல் இன்ஜினியரிங் ஆகிய பிரிவுகளை ஆர்வத்துடன் தேர்வு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
முதல் மூன்று ரேங்க்கினை பெற்ற மாணவ, மாணவியர்கள்
அண்ணாமலைப் பல்கலைக்கழக முதல்நாள் பிஇ கவுன்சிலிங்கில் தஞ்சை மாவட்டம் கருப்பூர் கபிஸ்தலத்தைச் சேர்ந்த மாணவர் எம்.ஆர்.சிவராமகிருஷ்ணன் முதல் ரேங்க் (கட்-ஆஃப் 191.50) பெற்று மெக்கானிக்கில் இன்ஜினியரிங் பிரிவில் அனுமதி சேர்க்கை ஆணை பெற்றார். சிதம்பரத்தைச் சேர்ந்த மாணவி எம்.துர்காதேவி இரண்டாவது ரேங்க் (கட்-ஆஃப் 191.25) பெற்று எல்க்டிரானிக் கம்யூனிகேஷன் பிரிவில் அனுமதி சேர்க்கை ஆணை பெற்றார். சிதம்பரத்தைச் சேர்ந்த வி.லோகேஷ்குமார் மூன்றாவது ரேங்க் (கட்-ஆஃப் 191.00) பெற்று சிவில் இன்ஜினியரிங் பிரிவில் அனுமதி சேர்க்கை ஆணை பெற்றார். மாற்றுத்திறனாளிகளுக்கான ஒதுக்கீட்டில் சிதம்பரம் அருகே உள்ள பூவாலை கிராமத்தில் வசிக்கும் தாழ்த்தப்பட்டோர் சமூகத்தைச் சேர்ந்த விவசாயி மகன் ஆர்.கோகுல்ராஜ் (கட்-ஆஃப் 111.75) அனுமதி சேர்க்கை ஆணை பெற்றார்.
பல்கலைக்கழக நிர்வாகியும், தமிழகஅரசு முதன்மை செயலருமான ஷிவ்தாஸ்மீனா முதல் 10 ரேங்க் பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு அனுமதி சேர்க்கை ஆணையினை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பதிவாளர் என்.பஞ்சநதம், பல்கலைக்கழக மாவட்ட வருவாய் அலுவலர்கள் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர். டி.கிருஸ்துராஜ், பொறியியல் புல முதல்வர் டி.வேலுசாமி மற்றும் துறைத்தலைவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பிஎஸ்சி வேளாண்மை படிப்பிற்கு ஜூலை 14-ல் கவுன்சிலிங் தொடக்கம்: பிஎஸ்சி வேளாண்மை, பிஎஸ்சி தோட்டக்கலை படிப்புகளுக்கு ஜூலை 14,15,16 தேதிகளிலும், பிபிடி, பி.பார்ம் மற்றும் பிஎஸ்சி நர்சிங் படிப்புகளுக்கு ஜூலை 17-ம் தேதியும் கவுன்சிலிங் நடைபெறுகிறது. கலந்தாய்விற்கான அழைப்பு கடிதம் பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பித்த மாணவர்கள் இணையதளத்தில் கலந்தாய்வு கடிதத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இவையல்லாமல் விண்ணப்பித்த மாணவ, மாணவியர்களுக்கு கவுன்சிலிங் குறித்து ஸ்பீட் போஸ்ட் மூலம் அழைப்பு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. எஸ்எம்எஸ் மூலமும் தகவலும் அனுப்பப்பட்டுள்ளது என பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது. தரவரிசைப்பட்டியல் குறித்தும், கவுன்சிலிங் அழைப்பு கடிதம் பதிவிறக்கம் செய்து கொள்ள தொடர்பு கொள்ள வேண்டிய பல்கலைக்கழக இணையதளம் முகவரி www.annamalaiuniversity.ac.in