சிதம்பரம் பகுதியில் இரு இளம்பெண்கள் மாயம்: போலீஸார் வழக்குப் பதிவு
சிதம்பரம் அருகே உள்ள வக்காரமாரியைச் சேர்ந்த கண்ணபிரான் மகள் மலர்விழி (18). நந்தனார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்டூ பயிலும் இவர் கடந்த ஜூலை 9-ம் தேதி முதல் காணவில்லை என
சிதம்பரம் பகுதியில் இரும் இளம்பெண்கள் காணவில்லை என போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.
சிதம்பரம் அருகே உள்ள வக்காரமாரியைச் சேர்ந்த கண்ணபிரான் மகள் மலர்விழி (18). நந்தனார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்டூ பயிலும் இவர் கடந்த ஜூலை 9-ம் தேதி முதல் காணவில்லை என அவரது தாயார் தையல்நாயகி சிதம்பரம் தாலுக்கா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதேபோன்று சிதம்பரம் அருகே கே.ஆடூர் நடுமேட்டைச் சேர்ந்த தங்கசாமி மகள் கவிதா (14). இவர் சிதம்பரம் ஆறுமுகநாவலர் பள்ளியில் பத்தாம் படித்து தேர்வில் தோல்வியுற்று வீட்டில் இருந்து வருகிறார். இந்நிலையில் கடந்த ஜூலை 8-ம் தேதி அதே ஊரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றவர் காணவில்லை என அவரது தந்தை தங்கசாமி சிதம்பரம் தாலுக்கா காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.
இந்த இருசம்பவங்கள் குறித்து சிதம்பரம் தாலுக்கா போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.