முகப்பு
தற்போதைய செய்திகள்

தமிழகத்தில் காவல்துறையில் வழங்குவது போல், தீயணைப்பு படை வீரர்களுக்கும் பதவிஉயர்வு வழங்கப்படுமா?

தமிழகத்தில் மொத்தம் 185 தீயணைப்பு நிலையங்கள் உள்ளன. தீயணைப்பு மீட்புத்துறையில் சுமார் 5 ஆயிரம் பேர் பணியாற்றுகின்றனர். இதில் 2 ஆயிரம் பேர் தீயணைப்போராக பணியாற்றுகின்றனர். தமிழ்நாடு சீருடை

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:51 AM
பகிர்:

தமிழகத்தில் தீயணைப்பு மீட்பத்துறை வீரர்களுக்கு, காவல்துறையினருக்கு அளிக்கப்படுவது போல் பதவிஉயர்வு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

தமிழகத்தில் மொத்தம் 185 தீயணைப்பு நிலையங்கள் உள்ளன. தீயணைப்பு மீட்புத்துறையில் சுமார் 5 ஆயிரம் பேர் பணியாற்றுகின்றனர். இதில் 2 ஆயிரம் பேர் தீயணைப்போராக பணியாற்றுகின்றனர். தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தால் (TNUSRB) காவல்துறை, சிறைத்துறை, தீயணைப்பு மீட்பு பணித்துறை ஆகிய மூன்று துறைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்வுகள் அறிவிக்கப்பட்டு தேர்வர்களின் விருப்பத்திற்கு இணங்கவும், முதுநிலை அடிப்படையிலும் காவலராகவோ அல்லது தீயணைப்போராகவோ அல்லது சிறைக்காவலராகவோ தேர்வு செய்யப்பட்டு அந்தந்த துறைகளில் பணியாளர்களாக பணி நியமனம் செய்யப்படுகிறார்கள்.

இவ்வாறு பணி நியம் பெறுவோர் காவல்துறையில் முதல்நிலை பதவிஉயர்வினை 10 ஆண்டுகளில் முதல் நிலை காவலராகவும், 15 ஆண்டுகளாலில் தலைமைக் காவலராகவும், 25 ஆண்டுகளில் சிறப்பு உதவி ஆய்வாளராகவும் கட்டாய பதவிஉயர்வு பெற்று அதற்குண்டான பணப்பலனை பெறுகின்றனர். இதைபோலவே காவல்துறையினரை குறிப்பிட்டு, சிறைக்காவலர்களும் பதவி உயர்வு பெற அரசாணை பெற்றுள்ளனர்.

ஆனால் தீயணைப்பு மீட்பு பணித்துறையில் மட்டும் தீயணைப்போராக பணி நியமனம் செய்யப்பட்ட பணியாளர் ஒருவர் தனது முதல் பதவி உயர்வினை முன்னணி தீயணைப்போராக பதவி உயர்வு பெறுவதற்கு 25 ஆண்டுகள் அல்லது அதற்கு மேலும் காத்திருந்து பணியிடம் காலியாக இருந்தால் மட்டும் முதுநிலை அடிப்படையில் பதவி உயர்வு வழங்கப்படுகிறது. அதன் பிறகு இரண்டாம் பதவி உயர்வான நிலைய அலுவலர் பதவி உயர்வு பெறாமலேயே பல முன்னணி தீயணைப்போர் பணி ஓய்வு பெறும் நிலை உள்ளது.

எனவை நடைபெறவுள்ள சட்டப்பேரவை மானியக்கோரிக்கையின் போது காவல் துறையினருக்கு வழங்குவது போல, தீயணைப்பு மீட்புத்துறையினருக்கு பதவிஉயர்வு வழங்குவது குறித்து அரசாணை வெளியிட தமிழகமுதல்வர் ஆணை பிறப்பிக்க வேண்டும் என தீயணைப்போர் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.