முகப்பு
தற்போதைய செய்திகள்

அண்ணாமலைப் பல்கலையில் பிஎஸ்சி வேளாண்மை படிப்பிற்கான கலந்தாய்வு நாளை தொடக்கம்

அண்ணாமலைப் பல்கலைக்கழக பிஎஸ்சி வேளாண்மை, பிஎஸ்சி தோட்டக்கலை படிப்புகளுக்கு ஜூலை 14,15,16 தேதிகளிலும், பிபிடி, பி.பார்ம் மற்றும் பிஎஸ்சி நர்சிங் படிப்புகளுக்கு ஜூலை 17-ம் தேதியும்

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:52 AM
பகிர்:

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பிஎஸ்சி வேளாண் படிப்பில் சேருவதற்கான கலந்தாய்வு நாளை (ஜூலை 14) திங்கள்கிழமை தொடங்கி 3 நாட்கள் நடைபெறுகிறது.

அண்ணாமலைப் பல்கலைக்கழக பிஎஸ்சி வேளாண்மை, பிஎஸ்சி தோட்டக்கலை படிப்புகளுக்கு ஜூலை 14,15,16 தேதிகளிலும், பிபிடி, பி.பார்ம் மற்றும் பிஎஸ்சி நர்சிங் படிப்புகளுக்கு ஜூலை 17-ம் தேதியும் கவுன்சிலிங் நடைபெறுகிறது. கலந்தாய்வு பல்கலைக்கழக நிர்வாகக்கட்டடத்தில் உள்ள சாஸ்திரி ஹாலில் நடைபெறுகிறது. கலந்தாய்விற்கான அழைப்பு கடிதம் பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பித்த மாணவர்கள் இணையதளத்தில் கலந்தாய்வு கடிதத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இவையல்லாமல் விண்ணப்பித்த மாணவ, மாணவியர்களுக்கு கவுன்சிலிங் குறித்து ஸ்பீட் போஸ்ட் மூலம் அழைப்பு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. எஸ்எம்எஸ் மூலமும் தகவலும் அனுப்பப்பட்டுள்ளது என பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.