விருதுநகர் அருகே 4 வழிச்சாலை பாலத்தில் வேன் மோதிய விபத்தில் இருசக்கர சக்கர வாகனத்தில் சென்றவர் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
சிவகாசி அருகே திருத்தங்கல் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டி(45). இவர் சொந்த வேலையின் காரணமாக தனது இருசக்கர வாகனத்தில் விருதுநகர் பகுதிக்கு வந்து கொண்டிருந்தாராம். அப்போது, புல்லலக்கோட்டை பிரிவு நான்கு வழிச்சாலை மேம்பாலம் அருகே செல்லும் போது எதிரே மேலூரிலிருந்து-சிவகாசி நோக்கிச் சென்ற வேன் நிலை தடுமாறி இருசக்கர வாகனம் மீது மோதியது.
இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த பாண்டி படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் பற்றி அறிந்த போலீஸார் விரைந்து சென்று பாண்டியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அதையடுத்து, இது தொடர்பாக விருதுநகர் மேற்கு காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
குடும்பத் தகராறில் ஒருவர் தூக்கிட்டு சாவு: விருதுநகர் அருகே ஆர்.ஆர்.நகரைச் சேர்ந்தவர் தேரிராஜன்(33). இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவரது வீட்டில் அடிக்கடி குடும்ப பிரச்னை ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மனம் உடைந்த தேரிராஜன் அருகில் சிமெண்ட் ஆலை தொழிலாளர்கள் கூடாரத்திற்கு சென்று தூக்கிட்டு உயிரிழந்தார். இதைப்பார்த்து தேரிராஜன் வீட்டிற்கு தகவல் தெரிவித்தனர்.
பின்னர் இது தொடர்பாக வச்சக்காரப்பட்டி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.