தற்போதைய செய்திகள்

விருதுநகர் அருகே கண்மாய் குளத்தில் மூழ்கி முதியவர் சாவு

விருதுநகர் அருகே இனாம்ரெட்டியபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துச்சாமி(64). இவர் ஊருக்கு மேற்கு மாரியம்மன் கோயில் கண்மாய்க்கு சனிக்கிழமை மாலையில் துணிகளை துவைத்து குளிப்பதற்காக சென்றாராம்

எஸ். பாண்டியன்

விருதுநகர் அருகே கண்மாய் குளத்தில் குளிக்கச் சென்ற முதியவர் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார்.

விருதுநகர் அருகே இனாம்ரெட்டியபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துச்சாமி(64). இவர் ஊருக்கு மேற்கு மாரியம்மன் கோயில் கண்மாய்க்கு சனிக்கிழமை மாலையில் துணிகளை துவைத்து குளிப்பதற்காக சென்றாராம். அப்போது தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். இது தொடர்பாக அவரது மனைவி மகாலட்சுமி சூலக்கரை காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

சாமி சிலை திருட்டு: விருதுநகர் அருகே உள்ளது பாவாலி கிராமம். இங்குள்ள குளக்கரையில் ஜமீன்தார் காலத்தில் வைக்கப்பட்ட சிலையை பொதுமக்கள் வழிபாடு செய்து வந்தனர். இந்நிலையில் சனிக்கிழமை யாரோ அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் குளக்கரை பிள்ளையார் சாமி சிலையை திருடிச் சென்றனர். இதையடுத்து, ஞாயிற்றுக்கிழமை காலையில் குளக்கரையில் குளிப்பதற்காக வந்த பொதுமக்கள் பிள்ளையார் சிலை திடீரென காணாமல் போயிருந்தது கண்டு திடுக்கிட்டனர். உடனே இது தொடர்பாக கிராம மக்கள் ஆமத்தூர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து இரவு நேரத்தில் குளக்கரையில் இருந்த பிள்ளையார் சிலையை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீஸார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சூப்பர் 8 சுற்று: இங்கிலாந்துக்கு எதிராக பாகிஸ்தான் பேட்டிங்!

பேரவைத் தேர்தல் : அதிமுகவிடம் 35 தொகுதிகளைக் கேட்கும் பாஜக?

ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டியில் சுபம் பண்டிர் சதம்: முதல் நாளில் ஜம்மு காஷ்மீர் 284 ரன்கள் குவிப்பு!

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 6 காசுகள் சரிந்து ரூ. 90.95 ஆக நிறைவு!

கிரையோதெரபி: புற்றுநோய் சிகிச்சையின் மைல்கல்! கட்டிகளை உறைய வைத்து அழிக்கும்!

SCROLL FOR NEXT