முகப்பு
தற்போதைய செய்திகள்

அடிப்படை வசதி கோரி நந்தனார் அரசு பள்ளி மாணவர்கள் தர்ணா போராட்டம்

கழிப்பறை, தண்ணீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதி கோரி சிதம்பரம் அரசு நந்தனார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விடுதி மாணவர்கள் திங்கள்கிழமை காலை உணவு சாப்பிடாமல் புறக்கணித்து விடுதி

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:52 AM
பகிர்:

கழிப்பறை, தண்ணீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதி கோரி சிதம்பரம் அரசு நந்தனார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விடுதி மாணவர்கள் திங்கள்கிழமை காலை உணவு சாப்பிடாமல் புறக்கணித்து விடுதி வளாகத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் சிதம்பரம் அரசு நந்தனார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விடுதி மாணவர்கள் தண்ணீர் வசதி, கழிப்பறை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி திங்கள்கிழமை காலை தீடிரென உணவு சாப்பிட மறுத்தும், பள்ளிக்கு செல்லாமல் விடுதி வளாகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் விடுதியில் உணவு தரமாக வழங்கப்படவில்லை என்றும், சோப் உள்ளிட்ட பொருள்கள் வழங்கப்படுவதில்லை என அம்மாணவர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் அகஸ்டின் ஜோஸ்வா லாமேக், சிதம்பரம் வட்டாட்சியர் (பொறுப்பு) ராஜேந்திரன், ஆதிதிராவிட நலத்துறை பொறியாளர் கலைச்செல்வன், வருவாய் ஆய்வாளர் அசோகன், கிராம நிர்வாக அலுவலர் திருமூர்த்தி உள்ளிட்டோர் சென்று மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அடிப்படை வசதிகளை உடனடியாக செய்து கொடுப்பதாக தெரிவித்ததை அடுத்து போராட்டத்தில் வாபஸ் பெற்று மாணவர்கள் பள்ளிக்கு சென்றனர். மேலும் பிளம்பரை வரவழைத்து விடுதிக்கு தண்ணீர் வசதி செய்து கொடுக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.