நீர்வரத்து அதிகரிப்பு: சேர்வலாறு, அடவிநயினார் அணைகளின் நீர்மட்டம் உயர்வு
மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் மிதமான மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதையடுத்து சேர்வலாறு, அடவிநயினார் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் மிதமான மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதையடுத்து சேர்வலாறு, அடவிநயினார் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியில் அவ்வப்போது பெய்து வரும் மிதமான மழையால் அணைகளின் நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது. எனினும் மழை நீடிக்காத காரணத்தால் எதிர்பார்த்தவாறு அணைகளின் நீர்மட்டம் கணிசமாக உயரவில்லை.
செவ்வாய்க்கிழமை நிலவரப்படி பாபநாசம் அணையில் 2 மி.மீ மழையும், சேர்வலாறு அணையில் 1 மி.மீ மழையும், கடனாநதி அணையில் 1 மி.மீ மழையும், குண்டாறு அணையில் 11 மி.மீ மழையும், அடவிநயினார் அணையில் 31 மி.மீ மழையும், செங்கோட்டையில் 5 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது.
நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் மிதமான மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதது. பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 1220.95 கனஅடியும், கடனாநதி அணைக்கு விநாடிக்கு 75 கனஅடியும், ராமநதி அணைக்கு விநாடிக்கு 40 கனஅடியும், குண்டாறு அணைக்கு விநாடிக்கு 8 கனஅடியும், அடவிநயினார் அணைக்கு விநாடிக்கு 80 கனஅடியும் நீர்வரத்து இருந்தது.
நீர்மட்டம் உயர்வு: பாபநாசம் அணையின் நீர்மட்டம் 59.05 அடியாக இருந்தது. அணையில் இருந்து பாசனம், குடிநீர் தேவைக்காக 1104.75 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 2.06 அடி உயர்ந்து 71.19 அடியாக இருந்தது. மணிமுத்தாறு அணையில் இருந்து 75 கனஅடி பெருங்கால் பாசனத்திற்கு திறக்கப்பட்டுள்ளது.
கடனாநதி அணையின் நீர்மட்டம் 53.30 அடியாகவும், ராமநதி அணையின் நீர்மட்டம் 65.00 அடியாகவும் இருந்தது. இவ்விரு அணைகளுக்கு வந்து கொண்டிருந்த தண்ணீர் பாசனம், குடிநீர் தேவைக்காக திறந்து விடப்பட்டுள்ளது. கருப்பாநதி அணையின் நீர்மட்டம் 40.65 அடியாகவும், குண்டாறு அணையின் நீர்மட்டம் 36.10 அடியாகவும் இருந்தது.
அடவிநயினார் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 5 அடி உயர்ந்து 68.00 அடியாக இருந்தது. வடக்கு பச்சையாறு அணையின் நீர்மட்டம் 2.00 அடியாகவும், நம்பியாறு அணையின் நீர்மட்டம் 10.10 அடியாகவும், கொடுமுடியாறு அணையின் நீ்ர்மட்டம் 2.50 அடியாகவும் இருந்தது.