சிதம்பரம் அருகே புதைக்கப்பட்ட தலித் பெண் சடலம் தோண்டி எடுப்பு: விடுதலைச் சிறுத்தைகள்., கம்யூ. கட்சியினர் சாலைமறியல்
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே எரித்து கொலை செய்யப்பட்டு சிதம்பரம் புறவழிச்சாலையில் புதைக்கப்பட்ட தலித் பெண்ணின் சடலத்தை வருவாய்த்துறையினர் மற்றும் காவல்துறையினர் முன்னிலையில் சனிக்கிழமை தோண்டி எடுக்கப்பட்டு பிரதே பரிசோதனை செய்யப்பட்டது.

உடல் தோண்டி எடுக்கப்பட்ட நிலையில், பெண் கொலை குறித்து வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, உரிய இழப்பீடு மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தி சிதம்பரம்-சீர்காழி சாலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளர்கள் வ.க.செல்லப்பன், பா.தாமரைச்செல்வன், மார்க்சிஸ்ட் கம்யூ கட்சி மாவட்டக்குழு உறுப்பினர் பி.கற்பனைச்செல்வம், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர் வி.வாஞ்சிநாதன், புவனகிரி ஒன்றியச் செயலாளர் சதானந்தம், ஜாகீர்உசேன் மற்றும் பெற்றோர், உறவினர்கள் உள்ளிட்ட நூறு பேர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
பின்னர் உதவிஆட்சியர் எம்.அரவிந்த், வட்டாட்சியர் ஜி.அன்புசெல்வி, டிஎஸ்பி ஆர்.ராஜாராம் ஆகியோர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உதவிஆட்சியர் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று சமாதானக் கூட்டத்தை நடத்தினர். கூட்டத்தில் கொலை செய்யப்பட்ட தலித் பெண் சீதா குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் இழப்பீடும், 2 ஏக்கர் நிலமும் வழங்குவது, குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்க அரசுக்கு பரிந்துரை செய்வது என முடிவு செய்யப்பட்டது.