சிதம்பரத்தில் மீட்கப்பட்ட சிறுமியின் தாயார் மாயம்: போலீஸார் வழக்குப் பதிவு
சிதம்பரம் கோயிலில் மீட்கப்பட்ட 4 வயது சிறுமியின் தாயார் முத்துலட்சுமியை காணவில்லை என சோழத்தரம் காவல் நிலையத்தில் அவரது மாமனார் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து
சிதம்பரம் கோயிலில் மீட்கப்பட்ட 4 வயது சிறுமியின் தாயார் முத்துலட்சுமியை காணவில்லை என சோழத்தரம் காவல் நிலையத்தில் அவரது மாமனார் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து முத்துலட்சுமியை தேடி வருகின்றனர்.
சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில் தெற்கு கோபுர வாயில் பகுதியில் சனிக்கிழமை மாலை 4 வயது சிறுமி தனியாக நின்று அழுது கொண்டிருந்தது. இதனை பார்த்த அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் அச்சிறுமியை சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் கொண்டு வந்து ஒப்படைத்தார். குழந்தையிடம் போலீஸார் நடத்திய விசாரணையில் காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள கருணாகரநல்லூரைச் சேர்ந்த சந்திரசேகரன் மகள் மீனா (4) என்றும், சந்திரசேகரன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருவதும், தாய் முத்துலட்சுமியுடன் கோயிலுக்கு வந்ததும் தெரியவந்தது.
மேலும் சிதம்பரம் நகர போலீஸார் கருணாகரநல்லூரில் உள்ள அவரது வீட்டிற்கு சென்று பார்த்த போது வீடு பூட்டியிருப்பது தெரியவந்தது, அச்சிறுமியை அவரது தாத்தா ராசப்பா மற்றும் ஊராட்சி மன்றத் தலைவரிடம் ஒப்படைத்தனர். மேலும் போலீஸார் சிறுமியின் தாயார் முத்துலட்சுமியை செல்போனில் தொடர்பு கொண்ட போது ஸ்விச் ஆஃப் செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது.
இதனையடுத்து தனது மருமகள் முத்துலட்சுமி (23) காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள காட்டுக்கொள்ளை கிராமத்திற்கு கருமக்காரியத்திற்கு 8 பவுன் இரு செயின்கள், மோதிரம், கொலுசு உள்ளிட்ட நகைகள் மற்றும் குழந்தை மீனா (4) ஆகியோருடன் சனிக்கிழமை காலை சென்றவர் காணவில்லை என கணவர் சந்திரசேகரன் தந்தை ராசப்பன் காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள சோழத்தரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து குழந்தையை சிதம்பரம் கோயிலில் தனியாக பரிதவிக்க விட்டு, மாயமான தாயார் முத்துலட்சுமியை தேடி வருகின்றனர்.