முகப்பு
தற்போதைய செய்திகள்

காலிக்குடங்களுடன் பெண்கள் முற்றுகை

சங்கரன்கோவில் ஒன்றியம், பனையூர் ஊராட்சியில் மேலத்தெரு பகுதியில் வசிக்கும் மக்களுக்கு கடந்த 3 மாதங்களாக குடிநீர் விநியோகம் இல்லை. தாமிரவருணி நதி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் பல்வேறு

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:56 AM
பகிர்:

திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை  3 மாதங்களாக குடிநீர் விநியோகம் இல்லை என புகார் பெண்கள் காலிக்குடங்களுடன் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சங்கரன்கோவில் ஒன்றியம், பனையூர் ஊராட்சியில் மேலத்தெரு பகுதியில் வசிக்கும் மக்களுக்கு கடந்த 3 மாதங்களாக குடிநீர் விநியோகம் இல்லை. தாமிரவருணி நதி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் பல்வேறு ஊர்களுக்கு பனையூர் கிராமம் வழியாக குடிநீர் திட்டம் நிறைவேற்றப்படுகிறது. பனையூர் கீழத்தெரு காலனியில் வசிப்பவர்கள் முறைகேடாக குழாயில் இருந்து குடிநீர் எடுத்து வருகின்றனர்.

பனையூர் ஊராட்சியில் முறையாக 104 குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் அனுமதியில்லாமல் அதிகளவில் குடிநீர் இணைப்புகள் எடுக்கப்பட்டுள்ளன. இதுபோன்ற காரணங்களால் பனையூர் மேலத்தெரு பகுதியில் வசிக்கும் மக்களுக்கு கடந்த 3 மாதம் குடிநீர் கிடைக்கவில்லை.அப்பகுதி பெண்கள் 50 க்கும் மேற்பட்டோர் திங்கள்கிழமை ஆட்சியர் அலுவலகத்தில் திரண்டு குடிநீர் பிரச்னையை தீர்க்க வேண்டும் என வலியுறுத்தி முற்றுகையிட்டனர்.

இதேபோல், நான்குனேரி ஒன்றியம், ஆழ்வானேரி ஊராட்சியில் கோவைகுளம் கிராம மக்கள் தங்கள் பகுதிக்கு சீரான குடிநீர் விநியோகம் கிடைக்கவில்லை என புகார் தெரிவித்து கோவைகுளம் பெண்கள் காலிக்குடங்களுடன் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →