முகப்பு
தற்போதைய செய்திகள்

தூத்துக்குடி அருகே பேருந்து படிக்கட்டில் இருந்து தவறிவிழுந்து +2 மாணவர் பலி

தூத்துக்குடி அருகே பேருந்து படிக்கட்டில் இருந்து தவறிவிழுந்து +2 மாணவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:57 AM
பகிர்:

தூத்துக்குடி அருகே பேருந்து படிக்கட்டில் இருந்து தவறிவிழுந்து +2 மாணவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி அருகேயுள்ள முள்ளக்காடு - சாந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர், செந்தில் ஆறுமுகம் மகன் முத்துராம் குமார் (17) தூத்துக்குடியில் உள்ள தனியார் பளியில் +2 படித்துவந்தார். இவர், கோவங்காடு - தூத்துக்குடி வரும் அரசின் நகரப் பேருந்தில் இன்று காலை வழக்கம் போல் பயணித்தார். பேருந்தினுள் கூட்டம் அதிகமாக இருக்கவே, முன்பக்கம் படிக்கட்டில் தொங்கியபடி வந்தாராம். அந்தப் பேருந்து, கோப்புத்தெரு என்ற இடத்தில் வந்தபோது, பேருந்தில் இருந்து தவறி விழுந்துள்ளார். சாலையில் பேருந்தின் பின் சக்கரத்தினுள் சிக்கி, படுகாயமடைந்த அவர் உடனடியாக மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டார். செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார். இது குறித்து முத்தையாபுரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.