தற்போதைய செய்திகள்

விருதுநகரில் தேசிய அடையாள அட்டை வழங்க வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

விருதுநகர் தேசபந்து மைதானத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனைத்து வகை  மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஜி.பெருமாள் தலைமை வகித்தார். மாநில

எஸ். பாண்டியன்

அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கும் தேசிய அடையாள அட்டை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விருதுநகர் தேசபந்து மைதானத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனைத்து வகை  மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஜி.பெருமாள் தலைமை வகித்தார். மாநில துணைப் பொதுச்செயலாளர் ஞானகுரு ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார்.இதில், அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கும் தேசிய அடையாள அட்டைகள் வழங்க வேண்டும். ஒவ்வொரு அரசு மருத்துவமனையிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காகவே நரம்பியல் மருத்துவ நிபுணர் நியமனம் செய்யவும் மற்றும் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் 3 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரி்க்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் மாவட்டத்தி்ல பல்வேறு பகுதிகளில் இருந்து மாற்றுத்திறனாளிகள் திரளாக கலந்து கொண்டனர். இறுதியாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் சீனிவாசன் நன்றி கூறினார்.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஹெட்மேயர் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் சொத்து: சாய் ஹோப்

சூப்பர் 8 சுற்று: இங்கிலாந்துக்கு எதிராக பாகிஸ்தான் பேட்டிங்!

பேரவைத் தேர்தல் : அதிமுகவிடம் 35 தொகுதிகளைக் கேட்கும் பாஜக?

ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டியில் சுபம் பண்டிர் சதம்: முதல் நாளில் ஜம்மு காஷ்மீர் 284 ரன்கள் குவிப்பு!

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 6 காசுகள் சரிந்து ரூ. 90.95 ஆக நிறைவு!

SCROLL FOR NEXT