தற்போதைய செய்திகள்

விருதுநகர் பகுதி கிராங்களில் வீடுகளில் கருந்திரி தயாரிக்க அனுமதி அளிக்க வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

விருதுநகர் அருகே ஓ.கோவில்பட்டி, சங்கரலிங்காபுரம், ஒண்டிப்புலிநாயக்கனூர், முத்துலாபுரம் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்தவர்கள் வீடுகளில் பட்டாசுகளுக்கு பயன்படுத்தப்படும் கருந்திரி கட்டுக்களை தயாரிக்க

எஸ். பாண்டியன்

விருதுநகர் பகுதி கிராமங்களில் வீடுகளில் கருந்திரிகளை தயார் செய்ய அனுமதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.

விருதுநகர் அருகே ஓ.கோவில்பட்டி, சங்கரலிங்காபுரம், ஒண்டிப்புலிநாயக்கனூர், முத்துலாபுரம் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்தவர்கள் வீடுகளில் பட்டாசுகளுக்கு பயன்படுத்தப்படும் கருந்திரி கட்டுக்களை தயாரிக்க அனுமதிக்க வேண்டும். இதை வலியுறுத்தி புதன்கிழமை கிராம மக்கள் ஆட்சியர் அலுவலகத்தை திடீரென  முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார் தடுத்து நிறுத்தி பேச்சு வார்த்தை நடத்தினார்கள். கடந்த மாதம் இப்பகுதியில் அனுமதியின்றி கூடாரம் அமைத்து கருந்திரி தயாரித்த போது ஏற்பட்ட விபத்தில் உயிரிழப்புகள் ஏற்பட்டது. இதையடுத்து போலீஸார் சோதனை என்கிற பேரில் தொழிலை சீரழித்து வருவதாக கிராம மக்கள் தெரிவித்தனர். அதையடுத்து கிராமத்திற்கு ஒவ்வொரு வீதம் ஆட்சியர் அலுவலகத்திற்குள் மனு அளிப்பதற்காக அனுப்பி வைத்தனர்.

சங்கரலிங்காபுரம் உள்ளிட்ட 10 கிராம மக்கள் சார்பில் ஆட்சியரிடம் அளித்த மனுவில் தெரிவித்திருப்பதாவது: இக்குறிப்பிட்ட கிராமங்களில் பட்டாசுகளுக்கு பயன்படுத்தப்படும் கருந்திரி தயாரிக்கும் தொழிலில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஈடுபட்டு வருகிறோம். இத்தொழிலில் இளைஞர்கள் முதல் முதியோர்கள் வரையில் கருந்திரி தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இப்பகுதி கிராமங்களில் உள்ளவர்களுக்கு இந்த வேலையைத் தவிர மாற்றுத்தொழில் எதுவும் தெரியாது. இத்தொழில் மூலம் கிடைக்கும் வருமானமே எங்களுக்கு வாழ்வாதரம் ஆகும்.

தற்போது, கருந்திரி தயாரிப்பதற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.  இதுபோன்ற காரணங்களால் போலீஸாரும் தீவிர ஆய்வு செய்து கருந்திரி கட்டுக்களையும், மூலப்பொருள்களையும் பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதனால் தொழில் பாதிக்கப்பட்டு, வருவாய்க்கு வழியில்லாத நிலையில் தவித்து வருகிறோம். அதனால் வீடுகளிலோ அல்லது காட்டுப்பகுதியிலோ கருந்திரிகளை எவ்வித இடையூறு இல்லாமல் அங்கிகாரத்துடன் தயாரிப்பதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என ஆட்சியரிடம் அளிக்க இருந்த மனுவில் கிராம மக்கள் தெரிவித்திருந்தனர்.

பின்னர் ஆட்சியர் முகாம் சென்றதை அடுத்து, அங்கிருந்த ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) கொங்கனிடம் மனு அளித்தனர். அதையடுத்து ஆட்சியரிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்த பின்னரே பொதுமக்கள் அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் ஆட்சியர் அலுவலக வளாக பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சூப்பர் 8 சுற்று: இங்கிலாந்துக்கு எதிராக பாகிஸ்தான் பேட்டிங்!

பேரவைத் தேர்தல் : அதிமுகவிடம் 35 தொகுதிகளைக் கேட்கும் பாஜக?

ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டியில் சுபம் பண்டிர் சதம்: முதல் நாளில் ஜம்மு காஷ்மீர் 284 ரன்கள் குவிப்பு!

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 6 காசுகள் சரிந்து ரூ. 90.95 ஆக நிறைவு!

கிரையோதெரபி: புற்றுநோய் சிகிச்சையின் மைல்கல்! கட்டிகளை உறைய வைத்து அழிக்கும்!

SCROLL FOR NEXT