தற்போதைய செய்திகள்

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் திருவிழா தாணிப்பாறையில் 600 போலீஸார் பாதுகாப்பு

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் திருக்கோயில் ஆடி அமாவசை திருவிழாவை முன்னிட்டு மலையடிவாரப் பகுதியான தாணிப்பாறையில் 600 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாகவும், பக்தர்கள் தீவிர சோதனைக்கு

எஸ். பாண்டியன்

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் திருக்கோயில் ஆடி அமாவசை திருவிழாவை முன்னிட்டு மலையடிவாரப் பகுதியான தாணிப்பாறையில் 600 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாகவும், பக்தர்கள் தீவிர சோதனைக்கு பின் மலையேற்றத்துக்கு அனுமதிக்கப்பட இருப்பதாகவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.பி.மகேஸ்வரன் தெரிவித்தார்.

சாப்டூர் சதுரகிரி சுந்தரமகாலிங்கம்-சந்தனமகாலிங்கம் திருக்கோயிலில் உச்சக்கட்ட திருவிழாவான ஆடி அமாவசை திருவிழா 26,27-ம் தேதிகளில் நடைபெற இருக்கிறது. இத்திருவிழாவில் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் திரளாக வந்து சதுரகிரி சுந்தரமகாலிங்கம் தரிசனம் பெற்றுச் செல்வார்கள். இதில், விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு-பேரையூர் சாலையில் உள்ள தாணிப்பாறை சாலை நுழைவு பகுதிகளிலிருந்து மலை அடிவாரப்பகுதி வரையில் 2 காவல் துணைக் கண்காணிப்பாளர்கள், 12 காவல் ஆய்வாளர்கள், 20 சார்பு ஆய்வாளர்கள் உள்ளிட்ட 600 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

அதேபோல், தாணிப்பாறை அடிவாரத்தில் உள்ள மலையேற்ற பாதையில் செல்வதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும், அசம்பாவிதங்களை தடுக்கும் வகையிலும் வெடிகுண்டு நிபுணர்கள் மூலம் மெட்டல் டிடெக்டர் கருவியால் பக்தர்களை சோதனை செய்வதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதையடுத்தே மலையேற்ற பாதையில் செல்வதற்கு அனுமதிக்கப்படுவார்கள். திருக்கோயிலுக்கு வரும் பாதை, தாணிப்பாறை வண்டிப்பண்ணையில் அமைக்கப்பட்டுள்ள தாற்காலிக பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதியில் நகைத் திருடர்கள் மற்றும் ஜேப்படி திருடர்கள் ஆகியோரை கண்காணிப்பதற்கு சீருடையில்லாத ஆண், பெண் காவலர்கள் ஈடுபட இருப்பதாகவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.மகேஸ்வரன் தெரிவித்தார்.

சிறப்பு பேருந்து வசதி: இக்கோயிலுக்கு எளிதாக சென்று வரும் வகையில் விருதுநகர், சிவகாசி, அருப்புக்கோட்டை, ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், மதுரை, திருநெல்வேலி, ராமநாதபுரம் உள்ளி்ட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து தாணிப்பாறைக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் 24-ம் தேதி முதல் 27-ம்தேதி வரையில் இரவு, பகல் எந்த நேரமும் சிறப்பு பேருந்துகள் இயக்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.    

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சூப்பர் 8 சுற்று: இங்கிலாந்துக்கு எதிராக பாகிஸ்தான் பேட்டிங்!

பேரவைத் தேர்தல் : அதிமுகவிடம் 35 தொகுதிகளைக் கேட்கும் பாஜக?

ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டியில் சுபம் பண்டிர் சதம்: முதல் நாளில் ஜம்மு காஷ்மீர் 284 ரன்கள் குவிப்பு!

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 6 காசுகள் சரிந்து ரூ. 90.95 ஆக நிறைவு!

கிரையோதெரபி: புற்றுநோய் சிகிச்சையின் மைல்கல்! கட்டிகளை உறைய வைத்து அழிக்கும்!

SCROLL FOR NEXT