சிதம்பரத்தில் மக்கள் சிவில் உரிமைக்கழக அறிமுகக் கூட்டம்
சிதம்பரம் மாலைக்கட்டித்தெரு ஆறுமுகநாவலர் நிலையத்தில் மக்கள் சிவில் உரிமைக்கழக அறிமுகக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கடலூர் மாவட்ட அமைப்பாளர் இல.கணபதிமுருகன் தலைமை வகித்துப் பேசினார்.
சிதம்பரத்தில் மக்கள் சிவில் உரிமைக்கழக அறிமுகக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சிதம்பரம் மாலைக்கட்டித்தெரு ஆறுமுகநாவலர் நிலையத்தில் மக்கள் சிவில் உரிமைக்கழக அறிமுகக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கடலூர் மாவட்ட அமைப்பாளர் இல.கணபதிமுருகன் தலைமை வகித்துப் பேசினார்.
அவர் பேசியது: தேர்தலில் நிற்பவர்களது சொத்து விபரம் மற்றும் அவரது குற்றப்பின்னணி குறித்து வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் என்ற தீர்ப்பினையும்ம், வீட்டற்றவர்களுக்கும், அநாதைகளுக்கும் இரவில் தங்குவதற்கு பாதுகாப்பான இடங்களை அரசு வழங்க வேண்டும் என்ற தீர்ப்பினையும், தேர்தலில் யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்று நிலைப்பாட்டை பெற்ற தந்த நோட்டா உரிமை போன்ற தீர்ப்பினையும் மக்கள் சிவில் உரிமைக்கழகம் நீதிமன்றத்தின் வாயிலாக நிலை நாட்டிய சாதனைகளாகும். மேலும் சமீபத்தில் காவல் நிலையச்சாவுகள், மோதல் சாவுகள் (Encounter deaths) ஆகிய தடுக்கப்பட வேண்டும் என்ற தீர்ப்பினையும் பெற்று மனித உரிமைகளின் பாதுகாவலனாக இந்த இயக்கம் திகழ்கிறது என இல.கணபதிமுருகன் தெரிவித்தார்.
கூட்டத்தில் மக்கள் சிவில் உரிமைக்கழக தமிழ் மாநில பொதுச்செயலாளர் வழக்குரைஞர் ச.பாலமுருகன், அண்ணாமலைப் பல்கலைக்கழக பேராசிரியர் இ.மணமாறன் உள்ளிட்டோர் பங்கேற்று மக்கள் உரிமைகள் குறித்து பல்வேறு கருத்துகளை தெரிவித்து உரையாற்றினர். துணைப் பேராசிரியர் ஆ.முத்துக்குட்டி நன்றி கூறினார்.