முகப்பு
தற்போதைய செய்திகள்

நெல்லை அருகே பூ வியாபாரி கொலை: உறவினர்கள் மறியலால் பரபரப்பு

திருநெல்வேலி மாவட்டம், பாப்பாக்குடி அருகே மோட்டார் சைக்கிளில் வந்த பூ வியாபாரியை மர்ம நபர்கள் கொலை செய்தனர். இந்த சம்பவத்தை கண்டித்து ஞாயிற்றுக்கிழமை உறவினர்கள் மறியலில் ஈடுபட்டதால்

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:59 AM
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம், பாப்பாக்குடி அருகே மோட்டார் சைக்கிளில் வந்த பூ வியாபாரியை மர்ம நபர்கள் கொலை செய்தனர். இந்த சம்பவத்தை கண்டித்து ஞாயிற்றுக்கிழமை உறவினர்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பாப்பாக்குடி அருகே இந்திராகாலனியை சேர்ந்தவர் சீவலப்பேரியான் மகன் பால்துரை (38). அதிமுக கிளை செயலரான இவர் தனக்கு சொந்தமான தோட்டத்தில் பூ பயிரிட்டுள்ளார். ஞாயிற்றுக்கிழமை பூக்களை பறித்து கொண்டு அம்பாசமுத்திரம் சந்தைக்கு பால்துரை மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தாராம்.

செங்குளம் அருகே வந்து கொண்டிருந்தபோது, அங்கு வந்த மர்ம நபர்கள் பால்துரை சரமாரியாக அரிவாளால் வெட்டி விட்டு தப்பிவிட்டனர். பலத்த காயமடைந்த பால்துரை சம்பவ இடத்திலே இறந்தார். போலீஸார் பால்துரை உடலை மீட்டு அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனை செய்ய அனுப்பி வைத்தனர். பாப்பாக்குடி போலீஸார் வழக்குப் பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

சாலை மறியல்: இதனிடையே பால்துரையின் உறவினர்கள் அம்பாசமுத்திரம் பிரதான சாலையில் நீதிமன்றம் அருகில் மறியலில் ஈடுபட்டனர். குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர். அம்பை டி.எஸ்.பி. பா. மணிமாறன், வட்டாட்சியர் சேதுராமலிங்கம் உள்ளிட்டோர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →