முகப்பு
தற்போதைய செய்திகள்

பைக் மீது லாரி மோதல்: தாய், மகன் பரிதாப சாவு

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அடுத்த சிங்காரப்பேட்டையைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி பாப்பாத்தி(46). இவர் திங்கள்கிழமை மாலை கரூர் மாவட்டம் மாயனூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு மகளின்

Updated On : 29 ஜூலை, 2014 at 3:53 PM
பகிர்:

கரூர் அருகே பைக் மீது லாரி மோதியதில் தாயும், மகனும் பரிதாபமாக இறந்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அடுத்த சிங்காரப்பேட்டையைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி பாப்பாத்தி(46). இவர் திங்கள்கிழமை மாலை கரூர் மாவட்டம் மாயனூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு மகளின் பூப்புனித நீராட்டு விழாவிற்கு அழைப்பிதழ் கொடுக்க தனது மகன் அருண்குமார்(24) என்பவருடன் பைக்கில் சென்றார். கரூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஆர்.புதுக்கோட்டை என்ற இடத்தில் சென்றுகொண்டிருந்தபோது பின்னால் வந்த மணல் லாரி பைக் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த இருவரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் இருவரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தனர். இதுகுறித்து மாயனூர் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.