முகப்பு
தற்போதைய செய்திகள்

கூடங்குளம் அணுமின் நிலையம் 1000 மெகாவாட் மின் உற்பத்தி செய்து சாதனை

ரஷிய நாட்டு நிதியுதவியுடன் மத்திய அரசு மூலம், திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளத்தில் 2 அணு உலைகள் நிறுவப்பட்டுள்ளன. தலா ஆயிரம் மெகாவாட் மின்உற்பத்தி திறன் கொண்ட இந்த உலைகளில்

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:32 AM
பகிர்:

கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முதல் அணு உலை 1000 மெகா வாட் மின்சாரத்தை உற்பத்தி செய்து அதன் முழு உற்பத்தித் திறனை எட்டி புதிய சாதனை படைத்துள்ளது.

ரஷிய நாட்டு நிதியுதவியுடன் மத்திய அரசு மூலம், திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளத்தில் 2 அணு உலைகள் நிறுவப்பட்டுள்ளன. தலா ஆயிரம் மெகாவாட் மின்உற்பத்தி திறன் கொண்ட இந்த உலைகளில் முதலாம் உலையில் கடந்த 2013 ஜூலை மாதமே மின்உற்பத்தி தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பரிசோதனை மற்றும் இயந்திரங்களில் ஏற்பட்ட பழுதுகாரணமாக மின்உற்பத்தி தாமதமானது. இதையடுத்து கடந்தாண்டு அக்டோபர் 22ஆம் தேதி அதிகாலை காலை 2.45 மணி முதல் சுமார் 2 மணிநேரத்துக்கு முதல் அணு உலையில் டர்பைன் இயக்கப்பட்டு 160 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக சனிக்கிழமை (ஜூன் 7) அதன் முழு கொள்ளளவு உற்பத்தி திறனான ஆயிரம் மெகவாட்டை கடந்து 1011 உற்பத்தி செய்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.