சிதம்பரத்தில் கழுத்து அறுபட்ட நிலையில் இறந்து கிடந்த ரெளடி மண்ரோடு ஹரி
சிதம்பரத்தில் வெள்ளிக்கிழமை மாலை கழுத்து அறுபட்ட நிலையில் ரெளடி மண்ரோடு ஹரி (36) என்பவர் அவரது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். கொலை செய்யப்பட்டாரா? என போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சிதம்பரத்தில் வெள்ளிக்கிழமை மாலை கழுத்து அறுபட்ட நிலையில் ரெளடி மண்ரோடு ஹரி (36) என்பவர் அவரது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். கொலை செய்யப்பட்டாரா? என போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சிதம்பரம் அண்ணாமலைநகர் சிவபுரி மெயின்ரோட்டு பகுதியில் உள்ள மண்ரோட்டைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் ஹரி (36). பிரபல ரெளடியான இவர் வெள்ளிக்கிழமை மாலை அவரது வீட்டின் வெளி வராண்டாவில் கழுத்து அறுபட்ட நிலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். தகவல் அறிந்த டிஎஸ்பி ஆர்.ராஜாராம், அண்ணாமலைநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மீனா மற்றும் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரதே பரிசோதனைக்கு சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இறந்து போன ஹரி மீது அண்ணாமலைநகர் காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளது. ஹரியின் மனைவி மதுமிதா (30) கடந்த 2 மாதம் முன்பு மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இவருக்கு கேஷிகா என்ற இரண்டரை வயது பெண் குழந்தை உள்ளார். மறைந்த பிரபல ரெளடி மண்ரோடு சந்திரனின் தம்பியாவார் ஹரி.
Advertisement