முகப்பு
தற்போதைய செய்திகள்

சிதம்பரம் நகரில் மட்டும் ஞாயிற்றுக்கிழமை மின்தடை

சிதம்பரம் நகரில் மின்மாற்றிகள், மின்பாதைகள் மேம்பாடு செய்யும் பணி நடைபெறவுள்ளதால் ஜூன் 8-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:32 AM
பகிர்:

சிதம்பரம் நகரில் மின்மாற்றிகள், மின்பாதைகள் மேம்பாடு செய்யும் பணி நடைபெறவுள்ளதால்  ஜூன் 8-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை நகரம் முழுவதும் மின்சாரம் நிறுத்தப்படும் என சிதம்பரம் கிளை மின்வாரிய செயற்பொறியாளர் ச.பாலசுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: மின்சார தேவைகள் நாளுக்கு, நாள் அதிகரித்து வருவதால், அதற்கு தகுந்தார்போல் புதியதாக உயர் மின்அழுத்த மின்பாதைகள் அமைத்தல், தாழ்வழுத்த மின் பாதைகள் அமைத்தல், புதி மின்மாற்றிகள் அமைத்தல் மற்றும் கெப்பாசிட்டர்கள் அமைத்தல் போன்ற மேம்பாட்டு பணிகள் செய்ய வேண்டிய அவசியம் இருப்பதால் ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சப்ளை நிறுத்தப்படும். பொதுமக்கள் இந்த மின்தடையை பொறுத்துக் கொண்டு மின்வாரியத்துடன் ஒத்துழைக்க வேண்டும் என செயற்பொறியாளர் ச.பாலசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments