பொன்னேரியில் சூறைக்காற்றுடன் பலத்த மழை
பொன்னேரி பகுதியில் கடந்த 2மாதமாக கடும் வெயிலுடன் பொதுமக்களை வெப்பம் வாட்டி வந்தது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு பொன்னேரி பகுதியில் சூறைக்காற்றுடன் பெய்த மழையால் வெப்பம் தணிந்தது.
பொன்னேரி பகுதியில் கடந்த 2மாதமாக கடும் வெயிலுடன் பொதுமக்களை வெப்பம் வாட்டி வந்தது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு பொன்னேரி பகுதியில் சூறைக்காற்றுடன் பெய்த மழையால் வெப்பம் தணிந்தது.
இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். இப்பகுதியில் கத்திரி முடிந்தும் கடும் வெப்பத்துடன் வெயில் அடித்தது.
இந்நிலையில் அப்பகுதியில் திடீரென இடி, மின்னல் சூறைக்காற்றுடன் மழை பெய்தது. இதனால் அப்பகுதியில் உள்ள 200-க்கும் மேற்பட்ட மரங்களின் கிளைகள் ஒடிந்து விழுந்தன. போக்குவரத்து பாதிப்பு... அதே போன்று பலத்த காற்றுடன் பெய்த மழை காரணமாக பொன்னேரி-பழவேற்காடு நெடுஞ்சாலையில் உள்ள பரிக்கப்பட்டு கிராமத்தில் மரம் ஒடிந்து சாலையில் விழுந்தது. சாலையில் விழுந்த மரத்தை நெடுஞ்சாலைத்துறையினர் அகற்றினர்.
Advertisement
Advertisement
இதனால் பொன்னேரியில் இருந்து பழவேற்காடுக்கு 2மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மின் கம்பங்கள் கீழே விழுந்தன... மழை காரணமாக ஒரு சில இடங்களில் மின் கம்பங்கள் ஒடிந்து கீழே விழுந்தன. 15மணி நேர மின்தடை.... பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்ததன் காரணமாக பொன்னேரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 15மணி நேரம் மின்தடை ஏற்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.