ஸ்ரீஆண்டாள் ஆடிப்பூர உற்சவம்: முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி
ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீஆண்டாள் ஆடிப்பூர உற்சவத்தில் ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான வெளிநாட்டவர் உள்பட நாட்டின் அனைத்துப் பகுதியிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து
தற்போதைய செய்திகள்ஸ்ரீஆண்டாள் ஆடிப்பூர உற்சவம்: முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி
ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீஆண்டாள் ஆடிப்பூர உற்சவத்தில் ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான வெளிநாட்டவர் உள்பட நாட்டின் அனைத்துப் பகுதியிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீஆண்டாள் ஆடிப்பூர உற்சவம் தொடங்கவுள்ளதையொட்டி, திங்கள்கிழமை முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீஆண்டாள் ஆடிப்பூர உற்சவத்தில் ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான வெளிநாட்டவர் உள்பட நாட்டின் அனைத்துப் பகுதியிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.இந்த ஆண்டு உற்சவத்திற்கான முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி, பெரிய தேரில் நடைபெற்றது. கோயில் பட்டர் டாக்டர் வெ.வாசுதேவன் முகூர்த்தக்காலுக்கு விசேஷ பூஜைகளை நடத்தினார்.
ஆடிப்பூர உற்சவம் ஜூலை 22-ம் தேதி (செவ்வாய்கிழமை) தொடங்குகிறது. முக்கிய நிகழ்ச்சியான ஐந்து கெருட சேவை ஜூலை 26-ம் தேதி (சனிக்கிழமை) யும், தேரோட்டம் ஜூலை 30-ம் தேதி (புதன்கிழமை) யும் நடைபெறுகிறது.உற்சவ நாட்களில் கோயின் சன்னதி முன்பு பல்வேறு கலை நிகழ்ச்சிகள், சொற்பொழிவுகள் நடைபெறுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை கோயில் தக்கார் கி.ரவிச்சந்திரன் செய்து வருகிறார்.