பழனி மலைக் கோயில் பிரசாத ஸ்டால் ரூ.3.60 கோடிக்கு ஏலம்
பழனி மலைக்கோயிலில் பக்தர்களுக்கு நிவேத்திய பிரசாதங்கள் வழங்கும் ஸ்டாலை திருக்கோயில் நிர்வாகம் ஒப்பந்தகாரர் மூலம் நடத்தி வருகிறது. மலைக்கோயிலில் மூன்று இடங்கள், படிப்பாதையில் முதல்படி அருகே என நான்கு இடங்களில் உள்ள இந்த பிரசாதஸ்டால் மூலமாக லட்டு, முறுக்கு, அப்பம், புட்டமுது
பழனி மலைக்கோயில் பிரசாத ஸ்டால் நடத்திக் கொள்ளும் உரிமம் ஏலத்தின் போது ரூ.3.60 கோடிக்கு ஏலம் போனது.
பழனி மலைக்கோயிலில் பக்தர்களுக்கு நிவேத்திய பிரசாதங்கள் வழங்கும் ஸ்டாலை திருக்கோயில் நிர்வாகம் ஒப்பந்தகாரர் மூலம் நடத்தி வருகிறது. மலைக்கோயிலில் மூன்று இடங்கள், படிப்பாதையில் முதல்படி அருகே என நான்கு இடங்களில் உள்ள இந்த பிரசாதஸ்டால் மூலமாக லட்டு, முறுக்கு, அப்பம், புட்டமுது, சர்க்கரை பொங்கல், புளியோதரை உள்ளிட்டவை விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில் பிரசாத ஸ்டால் தொடர்பான ஏலம் திருக்கோயில் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மதுரை மண்டல இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் முத்து தியாகராஜன் தலைமையில் நடைபெற்ற ஏல நிகழ்ச்சியில் பழனிக்கோயில் இணை ஆணையர்(பொறுப்பு) இராஜமாணிக்கம் உள்ளிட்ட ஏராளமான திருக்கோயில் அதிகாரிகள் பங்கேற்றனர்.
மூடி முத்திரையிடப்பட்ட ஒப்பந்தம் மற்றும் ஏலத்தில் அதிக பட்ச ஏலத்தொகையைாக ரூபாய் மூன்று கோடியே அறுபது இலட்சத்து 9 ஆயிரம் ரூபாய்க்கு திருச்சி திருவானைக்காவலை சேர்ந்த சீனிவாசன் என்பவர் பிரசாத ஸ்டால் விற்பனை உரிமத்தை பெற்றார். இவர் பொள்ளாச்சி ஆனைமலை மாசாணியம்மன் கோயில், சமயபுரம் மாரியம்மன் கோயில், சென்னை கபாலீஸ்வரர் கோயில் உள்ளிட்ட 15 கோயில்களில் பிரசாத ஸ்டால் நடத்தி வருகிறார். .
இவருக்கு அடுத்தபடியாக தற்போது பிரசாதஸ்டால் நடத்தி வரும் ஹரிஹரமுத்து என்பவர் ரூ.2.71 கோடிக்கு ஏலம் கேட்டிருந்தார்.
இவர் திருச்செந்தூர், திருத்தணி உள்ளிட்ட பல கோயில்களில் பிரசாத ஸ்டால் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
ஏலம் குறித்து அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்ததாவது, பழனிக்கோயி்ல பிரசாத ஸ்டால் ஏலம் சுமார் ஐந்து கோடிக்கு ஏலம் போகும் என எதிர்பார்த்தோம். ஆனாலும், கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு சுமார் சுமார் ஒன்றரை கோடி ரூபாய் அதிகமாக ஏலம் போகியுள்ளது.
ஏலதாரர் இந்த ஆண்டு ஜூலை.1ம் தேதி முதல் அடுத்த ஆண்டு ஜூன்.31ம் தேதி வரை கடையை நடத்த ஒப்பந்தம் வழங்கப்படும் என தெரிவித்தனர்.