தூத்துக்குடி புதிய அனல் மின் நிலையத்தில் உற்பத்தியாகும் மின்சாரத்தை தமிழகத்துக்கு வழங்க மதிமுக வலியுறுத்தல்
தூத்துக்குடி புதிய அனல் மின் நிலையத்தில் உற்பத்தியாக இருக்கும் மின்சாரத்தை தமிழகத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து 500 மெகாவாட்டாக ஒதுக்கீடு செய்து வழங்க வேண்டும் மதிமுக
தூத்துக்குடி புதிய அனல் மின் நிலையத்தில் உற்பத்தியாக இருக்கும் மின்சாரத்தை தமிழகத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து 500 மெகாவாட்டாக ஒதுக்கீடு செய்து வழங்க வேண்டும் மதிமுக வலியுறுத்தியுள்ளது.இதுதொடர்பாக மத்திய மின்துறை அமைச்சர் பியூஸ் கோயலுக்கு தூத்துக்குடி மாவட்ட மதிமுக செயலர் எஸ். ஜோயல் அனுப்பியுள்ள மனு விவரம்:
மத்திய அரசின் நெய்வேலி நிலக்கரி நிறுவனமும், தமிழ்நாடு மின்சார வாரியமும் இணைந்து தலா 500 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட இரண்டு அலகுகளைக் கொண்ட புதிய அனல் மின்நிலையம் தூத்துக்குடியில் அமைக்கப்பட்டு உற்பத்தியை தொடங்க தயாராக உள்ளது.இரண்டு மின்உற்பத்தி அலகுகளும் செயல்படும் பட்சத்தில் தமிழகத்துக்கு 387 மெகாவாட் மின்சாரம் வழங்கப்படும் என்று மின்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மின்உற்பத்தி ஒதுக்கீட்டில் மீதமாகும் 118.5 மெகாவாட் மின்சாரம் எந்த மாநிலத்துக்கு வழங்குவது என்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை. எனவே, அந்த மின்சாரத்தினையும் சேர்த்து தமிழகத்திற்கு 500 மெகாவாட் மின்சாரத்தினை வழங்கிடவேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.