சிதம்பரத்தில் சுவாமி சகஜாநந்தா மணி மண்டபம் அமைப்பதில் சிக்கலுக்குத் தீர்வு காண ஒருங்கிணைப்பு குழு கூட்டம்
சிதம்பரம் உதவிஆட்சியர் அலுவலகத்தில் தமிழக முதல்வர் அறிவிப்பின்படி சுவாமி சகஜாநந்தா மணி மண்டபம் எந்த இடத்தில் கட்டுவது என்பது தொடர்பாக ஏற்பட்டுள்ள சிக்கல் குறித்து தீர்வு காண ஒருங்கினைப்புக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
சிதம்பரம் உதவிஆட்சியர் அலுவலகத்தில் தமிழக முதல்வர் அறிவிப்பின்படி சுவாமி சகஜாநந்தா மணி மண்டபம் எந்த இடத்தில் கட்டுவது என்பது தொடர்பாக ஏற்பட்டுள்ள சிக்கல் குறித்து தீர்வு காண ஒருங்கினைப்புக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
கூட்டத்திற்கு உதவிஆட்சியர் எம்.அரவிந்த் தலைமை வகித்தார். கூட்டத்தில் டிஎஸ்பி ஆர்.ராஜாராம், கே.பாலகிருஷ்ணன் எம்எல்ஏ, அரசு வழக்குரைஞர் ஜி.சந்திரசேகன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் செல்வராஜ், வட்டாட்சியர் எம்.விஜயா, வருவாய் ஆய்வாளர் அசோகன், கிராம நிர்வாக அலுவலர் திருமூர்த்தி, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளர் வ.க.செல்லப்பன், நந்தனார் கல்விக்கழக தலைவர் சங்கரன், செயலாளர் ஜெயச்சந்திரன், நகரமன்ற உறுப்பினர் பெரு.திருவரசு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் கே.பாலகிருஷ்ணன் எம்எல்ஏ தெரிவித்தது: சகஜானந்தா மணிமண்டபம் கட்டும் இடம் குறித்து நீதிமன்றத்தில் உள்ள தடையானை விலக்கிக் கொள்ளவும், ஆட்சேபனை இல்லை இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி முன்பு வாக்குமூலம் அளித்ததின் பேரில் 2.05 ஏக்கர் இடம் வழக்கிலிருந்து விடுவித்து கடந்த ஏப்.15 தேதி உயர் நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக நான் தமிழக அரசுக்கு கடந்த ஏப்.25 ந்தேதி உயர்நீதிமன்றத்தின் ஆணையினை அளித்துள்ளேன். இந்நிலையில் தேர்வு செய்யப்பட்ட இடத்திலே மணிமண்டபம் அமைக்க வேண்டுமென மனு கொடுத்தும் சி.முட்லூர் கிராமத்தில் மக்கள் பயன்பாட்டில் இல்லாத இடத்தில் மணிமண்டபம் கட்ட அரசாணை வெளியிடப்பட்டிருப்பது மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது. சி,முட்லூர் பகுதியில் மணிமண்டபம் அமைப்பது பொருத்தமற்றது என்பதோடு பொதுமக்கள், போக்குவரத்து இல்லாத இடத்தில் மணிமண்டபம் அமைப்பது சமூக விரோத நடவடிக்கைக்கு புகலிடமாக மாறி பதற்றத்தையும், சட்டம் ஒழுங்கு பிரச்சனையும் ஏற்பட வாய்ப்புள்ளது என கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
பின்னர் கூட்டத்தில் கடந்த ஆண்டு சுவாமி சகஜாநந்தாவிற்கு மணிமண்டபம் கட்டுவதற்கு முதன் முதலில் தேர்வு செய்யப்பட்ட சீர்காழி மெயின் ரோட்டில் உள்ள நந்தனார் ஆண்கள் பள்ளியின் அருகில் உள்ள கட்டுவது என அனைவராலும் ஏற்றுகொள்ளப்பட்டது. இதனை தொடர்ந்து கூட்டத்தில் நடைபெற்ற அனைத்து தகவல்களையும் அரசுக்கு தெரிவிப்பதாக உதவிஆட்சியர் எம்.அரவிந்த் தெரிவித்தார்.