முகப்பு
தற்போதைய செய்திகள்

சேத்தியாத்தோப்பு அருகே கட்டடத் தொழிலாளர் கொலை!

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ள அள்ளூர் கிராமம் மாரியம்மன் கோயில் தெருவைசேர்ந்த கட்டடத் தொழிலாளரான ரவி (32). சேத்தியாத்தோப்பு வாய்க்கால் மேட்டுத்தெருவைச்

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:39 AM
பகிர்:

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே தாயுடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்த கட்டடத் தொழிலாளரை மகன் கத்தியால் குத்தி கொலை செய்தார்.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ள அள்ளூர் கிராமம் மாரியம்மன் கோயில் தெருவைசேர்ந்த கட்டடத் தொழிலாளரான ரவி (32). சேத்தியாத்தோப்பு வாய்க்கால் மேட்டுத்தெருவைச் சேர்ந்தவர் குலோத்துங்கன் (19). இவர் இருசக்கர வாகன மெக்கானிக்காக உள்ளார்.

ரவிக்கும், குலோத்துங்கன் தந்தையான பழனிவேலுவும் நெருக்கமாக பழகிவந்துள்ளனர். இதனால் ரவி, அடிக்கடி குலோத்துங்கன் வீட்டிற்கு சென்று நீண்ட நேரம் பேசிக்கொண்டிருப்பார் எனவும் கூறப்படுகிறது. ரவிக்கும், குலோத்துங்கன் தாயாருக்கும் கள்ளத் தொடர்பு இருந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையறிந்த குலோத்துங்கன் ஆத்திரமடைந்து வியாழக்கிழமை இரவு, தனது வீட்டிற்கு வந்த ரவியை கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு ஓடிவிட்டதாக தெரிகிறது.

தகவல் அறிந்த சேத்தியாத்தோப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் கே.அம்பேத்கர் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் சேத்தியாத்கோப்பு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு கொலை செய்த குலோத்துங்கனை கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.