முகப்பு
தற்போதைய செய்திகள்

அரசு அறிவித்த 12 மணி நேர மும்முனை மின்சாரம் வழங்க தேமுதிக கோரிக்கை

தமிழகஅரசு அறிவித்த காவிரி டெல்டா பகுதிகளுக்கான 12 மணி நேர மும்முனை மின்சாரத்தை உடனடியாக வழங்க வேண்டும் என கடலூர் தெற்கு மாவட்ட தேசிய முற்போக்கு திராவிட கழகம்

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:40 AM
பகிர்:

தமிழகஅரசு அறிவித்த காவிரி டெல்டா பகுதிகளுக்கான 12 மணி நேர மும்முனை மின்சாரத்தை உடனடியாக வழங்க வேண்டும் என கடலூர் தெற்கு மாவட்ட தேசிய முற்போக்கு திராவிட கழகம் கோரிக்கை விடுத்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

சிதம்பரம் தெற்குவீதி அறுபத்துமூன்று நாயன்மார்கள் மடத்தில் விஜய்காந்த் பிறந்தநாள் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்குவது குறித்து கடலூர் தெற்கு மாவட்ட தேமுதிக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட அவைத் தலைவர் பேராசிரியர் ஆர்.ஞானப்பிரகாசம் தலைமை வகித்தார். நகரச் செயலாளர் சி.க.விஜயகுமார் வரவேற்றார். மாவட்ட பொருளாளர் எஸ்.சிவானந்தம், மாவட்ட துணைச் செயலாளர்கள் ஆர்.பாலு, ஆர்.டி.எஸ்.விஜயசம்பத், வி.எஸ்.மணிமாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்டச் செயலாளர் சபா.சசிக்குமார் சிறப்புரையாற்றினார். பொதுக்குழு உறுப்பினர்கள் என்.ஜெயபாலன், பி.பாலபரவேஸ்வரன், ஒன்றியச் செயலாளர்கள் ஜெயமணிகண்டதேவன், சத்யா கொளஞ்சி, வி.எஸ்.ராஜவேல், ஆர்.பாலசந்தர் சிவசங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர் மாநில செயற்குழு உறுப்பினர் ஏ.தமிழரசன் நன்றி கூறினார்.

கூட்டத்தில் வருகிற ஆக.25-ம் தேதி தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்தநாளை மாவட்டம் முழுவதும் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடுவது, கட்சி கொடியேற்றி இனிப்பு வழங்குவது, பொதுக்கூட்டம் நடத்துவது; சிதம்பரம் நகராட்சியில் கடந்த திமுக ஆட்சியில் புதிய பாதாள சாக்கடை விரிவாக்க திட்டத்திற்கு நிதி ஒதுக்கப்பட்டு, அத்திட்டம் ரத்து செய்யப்பட்டது. தற்போதுள்ள அரசு நிதி ஒதுக்கியுள்ளது. எனவே புதிய பாதாள சாக்கடை விரிவாக்க திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.