முகப்பு
தற்போதைய செய்திகள்

அண்ணாமலைப் பல்கலைக்கழக எம்பிபிஸ், பிடிஎஸ் முதல் கட்ட கலந்தாய்வு கட்-ஆஃப் விபரம்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் புதன்கிழமை எம்பிபிஎஸ்., பிடிஎஸ் படிப்பிற்கான முதல் கட்ட கலந்தாய்வு முடிந்துள்ள நிலையில் அனுமதி சேர்க்கை வழங்கப்பட்டோர்களுக்கான

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:42 AM
பகிர்:

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் புதன்கிழமை எம்பிபிஎஸ்., பிடிஎஸ் படிப்பிற்கான முதல் கட்ட கலந்தாய்வு முடிந்துள்ள நிலையில் அனுமதி சேர்க்கை வழங்கப்பட்டோர்களுக்கான இடங்கள் மற்றும் கட்-ஆஃப் விபரம் பின் வருமாறு:

எம்பிபிஎஸ் (150 இடங்கள்): கலந்தாய்வில் பொதுப்பிரிவினர் (OC)- 46 இடங்களும், பிற்படுத்தப்பட்டோர் பிரிவிற்கான (BC) 40 இடங்களும் (இதில் மாற்றுத்திறனாளி ஒருவர் அடங்குவர்), மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினர் (MBC) 30 இடங்களும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (முஸ்லிம்)(BCM) - 5 இடங்களும், தாழ்த்தப்பட்ட வகுப்பினர் (SC)- 23 இடங்களும், தாழ்த்தப்பட்ட பிரிவினர் (SCA) (அருந்ததியர்)- 4 இடங்களும், பழங்குடியினர் (ST)- 2 இடங்களும் நிரம்பியது. எம்பிபிஎஸ் அனைத்து இடங்களும் நிரம்பியது.

எம்பிபிஎஸ் கட்ஆஃப் விபரம்: பொதுப்பிரிவினர் (OC)- 198.25, 197.75, பிற்படுத்தப்பட்டோர் பிரிவிற்கான (BC) - 197.75, 197.50,  மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினர் (MBC) - 197.75, 196.50,  பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (முஸ்லிம்)(BCM) - 196.75, 196.50, தாழ்த்தப்பட்ட வகுப்பினர் (SC)- 193.50, 192.50,  தாழ்த்தப்பட்ட பிரிவினர் (SCA) (அருந்ததியர்)- 188.50, 186.75, பழங்குடியினர் (ST)- 187.00, 180.50.

பிடிஎஸ் (100 இடங்கள்): கலந்தாய்வில் பொதுப்பிரிவினர் (OC)- 31 இடங்களும், பிற்படுத்தப்பட்டோர் பிரிவிற்கான (BC) 27 இடங்களும், மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினர் (MBC) 20 இடங்களும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (முஸ்லிம்)(BCM) - 3 இடங்களும், தாழ்த்தப்பட்ட வகுப்பினர் (SC)- 15 இடங்களும், பழங்குடியினர் (ST)- 1 நிரம்பின.  தாழ்த்தப்பட்ட பிரிவினர் (SCA) (அருந்ததியர்)- 3 இடங்கள் நிரப்பப்படாததால் காலியாக உள்ளது.  பிடிஎஸ் 97 இடங்கள் நிரம்பியது.

பிடிஎஸ் கட்-ஆஃப் விபரம்: பொதுப்பிரிவினர் (OC)- 197.75, 196.75,  பிற்படுத்தப்பட்டோர் பிரிவிற்கான (BC)  - 196.75, 196.00,  மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினர் (MBC) - 196.75, 195.00 , பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (முஸ்லிம்)(BCM) -  196.25, 195.75,  தாழ்த்தப்பட்ட வகுப்பினர் (SC)- 192, 190.75, தாழ்த்தப்பட்ட பிரிவினர் (SCA) (அருந்ததியர்)- நிரப்பப்படவில்லை , பழங்குடியினர் (ST)- 179.50, 179.50

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.