பழனி மலைக்கோயில் மூன்றாம் வின்ச் சிறப்பு பூஜைகளுடன் இயக்கம்
பழனி மலைக் கோயில் மூன்றாம் எண் வின்ச் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வெள்ளிக்கிழமை பக்தர்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது.
பழனி மலைக் கோயில் மூன்றாம் எண் வின்ச் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வெள்ளிக்கிழமை பக்தர்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது.
பழனி மலைக் கோயிலுக்கு பக்தர்கள் சென்றுவர ஏதுவாக படிவழிக்கு மாற்றாக வின்ச் இயக்கப்பட்டது. பக்தர்கள் வரவேற்பைத் தொடர்ந்து மூன்று வழிகளில் வின்ச் இயக்கப்பட்டது. இந்நிலையில் மூன்றாவது வின்ச் கடந்த சிலமாதங்களுக்கு முன் நிறுத்தப்பட்டு முழு பராமரிப்பு செய்யப்பட்டு புதுப்பொலிவு பெற்று பக்தர்கள் பயன்பாட்டுக்கு வந்தது.
கடந்த இரு தினங்களுக்கு முன் சுமார் 650 மீட்டர் அளவுடைய புதிய வடக்கயிறு சுமார் ஐந்து இலட்சம் செலவில் வரவழைக்கப்பட்டு மாற்றப்பட்டது. பணிகள் நிறைவு பெற்றதைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை வின்ச் பக்தர்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.
வின்ச் பெட்டிக்கு மாலைகள் அணிவிக்கப்பட்டு சக்கரத்தில் எலுமிச்சை வைக்கப்பட்டு சிவாச்சார்யார்களை கொண்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. தொடர்ந்து தீபாராதனை காட்டப்பட்டு வின்ச் இயக்கப்பட்டது. வின்ச் பூஜை நிகழ்ச்சியில் பழனிக்கோயில் இணை ஆணையர்(பொறுப்பு) ராஜமாணிக்கம், உதவி செயற்பொறியாளர் நாச்சிமுத்து, உதவிப்பொறியாளர் குமார், கண்காணிப்பாளர் வடிவு, பாலாஜி, நேர்முக உதவியாளர் அழகர் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.