முகப்பு
தற்போதைய செய்திகள்

பழனியில் அரைமணி நேரம் பெய்த மழையால் கடும் சேதம்

பழனியில் ஞாயிற்றுக்கிழமை மதியம் சுமார் அரைமணி நேரம் மழைபெய்தது. கனமழையுடன் சூறைக்காற்றும் வீசியதால் மக்கள் வெளியே வரவே அச்சப்பட்டனர்.  அரைமணி நேர மழையில் பழனியில் சண்முகபுரம்,

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:44 AM
பகிர்:

பழனியில் சுமார் அரைமணி நேரம் பெய்த மழையால் பல்வேறு இடங்களில் சேதமேற்பட்டது.

பழனியில் ஞாயிற்றுக்கிழமை மதியம் சுமார் அரைமணி நேரம் மழைபெய்தது. கனமழையுடன் சூறைக்காற்றும் வீசியதால் மக்கள் வெளியே வரவே அச்சப்பட்டனர்.  அரைமணி நேர மழையில் பழனியில் சண்முகபுரம், லட்சுமிபுரம், அண்ணாநகர் உள்ளிட்ட பல பகுதியில் ஏராளமான மரங்கள், கிளைகள் ஒடிந்து விழுந்தது.  லையன்ஸ்கிளப் ரோட்டில் மின்கம்பம், மரம் சாய்ந்து விழுந்ததில் டெம்போ, இருசக்கரவாகனங்கள் சேதமடைந்தது.  நகராட்சி பேருந்து நிலையத்தில் நகராட்சி உணவு விடுதியின் மேல்மாடியில் சுவர் இடிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.  நகரில் பல்வேறு இடங்களிலும் கடை போர்டுகள், பதாகைகள் சாய்ந்தது. 

சேதத்தைத் தொடர்ந்து மின்வாரிய உதவி செயற்பொறியளர் ராஜேந்திரன் தலைமையில் உதவிப் பொறியாளர்கள், உதவியாளர்கள் குழுவினர் சேதங்களை சீரமைத்து மின்சார வினியோகத்தை சீர் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.