தற்போதைய செய்திகள்

விருதுநகர் மாவட்டத்தில் ஓய்வூதியர்கள் கவனத்திற்கு

ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுகின்றவர்களுக்கு புதிய காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது. இதற்கான விவரங்களுடன் படிவங்களை ஜூலை-31-ம் தேதிக்குள் அந்தந்த ஓய்வூதிய பெறும்

எஸ். பாண்டியன்

ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுகின்றவர்களுக்கு புதிய காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது. இதற்கான விவரங்களுடன் படிவங்களை ஜூலை-31-ம் தேதிக்குள் அந்தந்த ஓய்வூதிய பெறும் கருவூலம் அல்லது வங்கியிலோ அளிக்குமாறு ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் கேட்டுக் கொண்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு விவரம்: ஜூலை-1ம் தேதி முதல் புதிய மருத்துவ காப்பீட்டு திட்டமுகாம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இதற்கான படிவங்களை இம்மாதம் 30ம் தேதிக்குள் அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது. இத்திட்டத்திற்கான படிவங்களை பெரும்பாலன ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதாரர்கள் ஆகியோர் தாங்கள் ஓய்வூதியம் பெறும் அலுவலகம் அல்லது வங்கியிலோ விவரங்களுடன் படிவங்களை அளிக்காத காரணத்தால், இதற்கான காலக்கெடு ஜூலை-31ம் தேதி வரையில் நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது.

எனவே இதுவரையில் விண்ணப்பங்கள் அளிக்காத ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்கள் ஆகியோர் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தாங்கள் ஓய்வூதியம் பெறும் கருவூலத்திலோ அல்லது பொதுத்துறை வங்கியிலோ குறிப்பிட்ட நாள்களுக்குள் அளிக்க வேண்டும். பின்னர் அந்த விண்ணப்பத்தின் நகலை பெற்று ஓய்வூதிய அலுவலரிடம் கையொப்பம் பெற்றுக் கொள்ள வேண்டும். இந்த நகலை அடையாள அட்டைகள் வழங்கப்படும் வரையில் இத்திட்டத்தின் அடிப்படையில் மருத்துவமனைகளில் பணச்செலவின்றி சிகிச்சைக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எதிர்நீச்சல் -2 தொடரிலிருந்து விலகியது ஏன்? நடிகை கனிகா விளக்கம்

திருமண கொண்டாட்டத்தில் விஜய் தேவரகொண்டா - ரஷ்மிகா மந்தனா!

சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் அலைமோதும் கூட்டம்!

மீண்டும் மகாபாரதம்! நாள்தோறும் காலை ஒருமணி நேரம் ஒளிபரப்பாகிறது!

பெத் மூனி அதிரடி: இந்தியாவை வீழ்த்தி ஆஸி. அபார வெற்றி!

SCROLL FOR NEXT